சைன், அருணாசலப் பிரதேசம்

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமம்

சைன் (Sine) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தின் போலெங் வட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2][3]

சைன் கிராமம்
Sine Village
ஊர் , கிழக்கு சியாங் மாவட்டம்
சைன் கிராமம் Sine Village is located in அருணாசலப் பிரதேசம்
சைன் கிராமம் Sine Village
சைன் கிராமம்
Sine Village
இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தில் அமைவிடம்
சைன் கிராமம் Sine Village is located in இந்தியா
சைன் கிராமம் Sine Village
சைன் கிராமம்
Sine Village
சைன் கிராமம்
Sine Village (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°24′08″N 94°50′46″E / 28.402105°N 94.845986°E / 28.402105; 94.845986
நாடு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு சியாங் மாவட்டம்
நிர்வாக வட்டம்போலெங்கு
அரசு
 • வகைசட்டப் பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்
 • சட்டப் பேரவை உறுப்பினர்தபாங் தாலோகு
 • நாடாளுமன்ற உறுப்பினர்நினோங்கு எரிங்கு
 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி
நேர வலயம்IST (UTC+5:30)
STD
791102
இணையதளம்www.eastsiang.nic.in

மொழிகள்

தொகு

ஆதி மொழி, ஆங்கிலம், இந்தி மற்றும் சினோ திபெத்தியமொழி ஆகியவை சைன் கிராமத்தில் பேசப்பட்டன.

கல்வியறிவு

தொகு

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சைன் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 438 ஆகும். இதில் 215 பேர் படிப்பறிவில்லாதவர்கள் மற்றும் 223 பேர் படிப்பறிவுள்ளவர்கள். 146 ஆண்களும் 77 பெண்களும் படிப்பறிவுள்ளவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.[4]

அமைவிடம்

தொகு

போலெங் வட்ட அலுவலகத்திலிருந்து 31 கி.மீ தொலைவில் சைன் கிராமம் அமைந்துள்ளது.[5]

தீ விபத்து

தொகு

2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சைனில் உள்ள மொத்த 64 வீடுகளில் 32 வீடுகள் எரிந்து பல குடும்பங்கள் வீடற்ற நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கால்நடைகள் இழப்பும் பதிவாகியுள்ளது. மேலும் ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்படும் அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. கிழக்கு சியாங் மற்றும் மேற்கு சியாங் பகுதிகளில் ஒரு மாத காலத்திற்குள் ஏற்பட்ட இரண்டாவது தீ விபத்து இதுவாகும். முன்னதாக, மேற்கு சியாங் மாவட்டத்தின் கயிங்கு வட்டத்தின் கீழ் உள்ள கெராங்கு கிராமத்திலும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 70 வீடுகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sine Population - East Siang, Arunachal Pradesh". www.census2011.co.in. Census 2011. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  2. "About Sine". www.indiamapped.in. India Mapped. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  3. "Sine". wikiedit.org. WikiEdit.Org. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  4. "Population Statistics Census 2011". ourhero.in. Our Hero. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  5. 5.0 5.1 "Fire devours 32 houses in Sine". The Arunachal Times. http://www.arunachaltimes.in/wordpress/2014/12/09/fire-devours-32-houses-in-sine/. பார்த்த நாள்: 9 December 2014. 
"https://ta.wiki.x.io/w/index.php?title=சைன்,_அருணாசலப்_பிரதேசம்&oldid=4195768" இலிருந்து மீள்விக்கப்பட்டது