சைசா நபராவி
சைசா நபராவி (Saiza Nabarawi) , (பிறப்பு ஜைனாப் முகமது மௌரத் நபராவி), (1897-1985) பாரிசில் கல்வி கற்ற ஒரு எகிப்திய பத்திரிகையாளர் ஆவார். பின்னர், இவர் எல் 'எகிப்தியன் பத்திரிகையின் முன்னணி ஆசிரியரானார்.
சைசா நபராவி | |
---|---|
பிறப்பு | 1897 எல்மென்சாவி அரண்மனை, கெய்ரோ, எகிப்து |
இறப்பு | 1985 |
தொழில் | பெண்ணியவாஅதி, ஊடகவியலாளர் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1925–1985 |
இளமை வாழ்க்கை
தொகுசைசா நபராவி அல்லது சிசா நபராவி முதலில் ஜைனாப் முகமது மௌரத் நபராவி என்ற பெயரில் எகிப்தின் தகாலியா மாகாணத்திலுள்ள நபரூவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். மேலும் இவர் முக்கிய எகிப்திய மருத்துவர் இப்ராகிம் நபராவியின் உறவினராவார்.[1] தூரத்து உறவினரான அடிலா நபராவியால் தத்தெடுக்கப்பட்ட இவர், கல்வி கற்பதற்காக பாரிசுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் வெர்சாயில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றார். இறுதியில் பாரிசிலுள்ள செயிண்ட் ஜெர்மைன் டெஸ் பிரெஸ் நிறுவனத்தில் படித்தார். பின்னர், அலெக்சாந்திரியாவிலுள்ள லெஸ் டேம்ஸ் டி சியோன் பிரெஞ்சுப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இவரது வளர்ப்புத் தாய் தற்கொலை செய்து கொண்டபோது, இவரது உயிரியல் பெற்றோர்களான முகமது முராத் மற்றும் பாத்மா அனிம் ஆகியோர் உரிமை கோரினர். அவர்களை நிராகரித்தது, இவர் தனது தாய்வழி தாத்தா பாட்டிகளுடன் வசித்து வந்தார். இவரது வளர்ப்புத் தாயின் நண்பரான உதா சராவியின் நடவடிக்கைகளில் தனது இளம் வயதிலேயே ஆர்வம் காட்டினார். மேலும் உதா சராவி இவரை ஒரு வலுவான விருப்பமுள்ள பெண்கள் ஆர்வலராக மாற உதவினார்.[2]
பிற்கால வாழ்க்கை
தொகுசைசா நபராவி, பல பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஹிஜாப் கட்டுபாடுகளுக்கு எதிராக போராடினார். பாரம்பரிய ஹிஜாப் (முக்காடு) அணிவதை நிறுத்த நபராவி முடிவு செய்தார். 1923 ஆம் ஆண்டில், உரோமில் நடந்த 9வது சர்வதேச பெண் வாக்குரிமை கூட்டணி மாநாட்டிலிருந்து திரும்பிய பிறகு, இவர் தனது முக்காடு மற்றும் மேலங்கியை அகற்றினார். இது எகிப்திய பெண்ணிய வரலாற்றில் ஒருமுக்கிய நிகழ்வாகும்.[3] [4] [5] [6] [7] [8]
1925 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் இருந்து விலக்கப்பட்டதைப் பற்றியும் அவர் தனது 'இரட்டை தரநிலை' என்ற கட்டுரையில் எழுதினார். எகிப்தின் சுதந்திரம் தொடர்பாக ஒரு பாராளுமன்றத்தில் தனக்கு எப்படி அனுமதி மறுக்கப்பட்டது என்பதை அவர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். பார்வையாளர்களில் முக்கியமான ஒரு வெற்றிகரமான செய்தித்தாளின் ஆசிரியரை விட, முக்கியமான அதிகாரிகளின் மனைவிகள் எவ்வாறு பார்வையாளர்களில் சேர்க்கப்பட்டனர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இவரது நகைச்சுவையும், வெளிப்படையான வார்த்தைகளும் நபராவியை சிறந்த ஆசிரியராகவும் பெண்ணியவாதியாகவும் ஆக்கியது.
எகிப்திய பெண்ணிய ஒன்றியம்
தொகுஎகிப்திய பெண்களுக்கு அரசியல் உரிமைகள் கோரி வந்த எகிப்திய பெண்ணிய ஒன்றியத்தின் நிறுவனர்களாக நபராவி மற்றும் உதா சராவி ஆகியோர் இருந்தனர். இந்த அமைப்பு எல் 'எகிப்தியன் என்ற இதழை தொகுத்தி வெளியிட்டது. நபராவி பெண்கள் மக்கள் எதிர்ப்புக் குழுவையும் நிறுவினார். தனது வாழ்க்கையை பெண்ணிய செயல்பாட்டிற்காக அர்ப்பணித்தார். மேலும் அனைத்துலக பெண்ணிய மாநாடுகளில் கலந்து கொண்டு பாலின சமத்துவம் குறித்த பிரச்சினைகள் குறித்து பரவலாகப் பேசினார்..[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ الموسوعة الثقافية: إبراهيم النبراوي من أنجب الجراحين (.... ــ 1279هـ ,... ــ 1862م ) பரணிடப்பட்டது 6 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Badran, Margot. Opening the Gates: An Anthology of Arab Feminists Writing (Second ed.). Indiana University Press. p. 279.
- ↑ On This Day She: Putting Women Back Into History One Day at a Time, p. 5
- ↑ Kristen Golden, Barbara Findlen: Remarkable Women of the Twentieth Century: 100 Portraits of Achievement.Friedman/Fairfax Publishers, 1998
- ↑ R. Brian Stanfield: The Courage to Lead: Transform Self, Transform Society, p. 151
- ↑ Emily S. Rosenberg, Jürgen Osterhammel: A World Connecting: 1870–1945, p. 879
- ↑ Anne Commire, Deborah Klezmer: Women in World History: A Biographical Encyclopedia, p. 577
- ↑ Ruth Ashby, Deborah Gore Ohrn: Herstory: Women who Changed the World , p. 184
- ↑ O'Connor, Karen. Gender and Women's Leadership: A Reference Handbook. SAGE Publications, Inc. p. 37.