செயலாக்க நிறமியன்
செயலாக்க நிறமியன் (Euchoromatin) என்பது நிறமியனின் (chromosome) இரு வகையில் ஒரு பிரிவில் வருவது ஆகும். நிறப்புரியில் இசுடோன் (Histone) என்னும் புரதங்களால் ஒழுங்காக சுற்றி ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பிற்கே நிறமியன் எனப்பெயர். இசுடோனில் அர்சினைன், லைசின் போன்ற நேர்மின்மம் கொண்ட அமினோ அமிலங்கள் மிகையாக உள்ளதால் இவைகள் நேர்மின்மத்தை கொண்டுள்ளது. இதனால் எதிர்மின்மம் கொண்ட நிறப்புரியில் எளிதாக பிணையும் தன்மை கொண்டுள்ளது. இசுடோன் தளர்ந்த முறையில் கட்டமைக்கப்பட்ட முறைக்கு செயலாக்க நிறமியன் எனப்பெயர். இவைகளில் தான் பெரும்பாலான மாந்த மரபணுக்கள் இடம் பெற்றுள்ளன. இசுடோன் புரதத்தால் தளர்ந்த முறையில் சுருள் சுருளாக சுற்றப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் எப்பொழுதும் மரபணு வெளிபடுவதற்கு ஆயத்தமாக இருக்கும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/3/38/Diagram_human_cell_nucleus.svg/300px-Diagram_human_cell_nucleus.svg.png)
இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட முறைக்கு செயலற்ற நிறமியன் (heterochromatin) எனப்பெயர்.
நுண்நோக்கியில் தோற்றம்:
தொகுஇவைகள் GTG பட்டைகள் (GTG banding) என்னும் முறையில் நுண்நோக்கியில் நோக்கும் போது, மெல்லிய நிறங்களில் தோற்றமளிக்கும்.