உலக வர்த்தக மையம், சென்னை
(சென்னை உலக வர்த்தக மையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உலக வர்த்தக மையம், சென்னை (World Trade Center, Chennai) என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள வணிக மையமாகும். தென்சென்னையின் பெருங்குடியில் அமைந்துள்ள இது மார்ச் 2020-ல் செயல்படத் துவங்கியது. 28 அடுக்குகளில் 1,800,000 சதுர அடி பரப்பளவுள்ள இரட்டை அலுவலக் கட்டடமான இந்த வளாகத்தில் ஒரு மாநாடு/கண்காட்சி மையமும் உள்ளது. இக்கட்டடங்கள் IGBC LEED பிளாட்டினம் மற்றும் USGBC LEED தங்கம் சான்றளிக்கப்பட்டவை. இந்த மையம் உலக வர்த்தக மையங்கள் சங்கத்தின் (WTCA) உறுப்பினராகும். இவ்வளாகத்தின் முதல் கட்டடமானது சென்னையின் மிக உயரமான வணிகக் கட்டடமாகும்.
சென்னை உலக வர்த்தக மையம் | |
---|---|
![]() மார்ச் 2020-ல் சென்னை உலக வர்த்தக மையம் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | கட்டிமுடிக்கப்பட்டது |
வகை | அலுவல் |
இடம் | பெருங்குடி, சென்னை, இந்தியா |
முகவரி | 110 பழைய மகாபலிபுரம் சாலை, பெருங்குடி, சென்னை 600096 |
ஆள்கூற்று | 12°57′42″N 80°14′43″E / 12.9616°N 80.2452°E |
கட்டுமான ஆரம்பம் | 2013 |
நிறைவுற்றது | 2020 |
உரிமையாளர் | ப்ரிகேட் குழுமம், GIC |
உயரம் | |
கூரை | 105.27 மீட்டர்கள் (345 அடி) (கட்டடம் 1)[1] 75.19 மீட்டர்கள் (247 அடி) (கட்டடம் 2)[2] |
மேல் தளம் | 27 (கட்டடம் 1) 19 (கட்டடம் 2) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 28 (கட்டடம் 1) 20 (கட்டடம் 2) |
தளப்பரப்பு | 1,800,000 சதுர அடி (கட்டடம் 1: 1,200,000 சதுர அடி; கட்டடம் 2: 600,000 சதுர அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | HOK, நியூயார்க்கு நகரம் |
மேம்பாட்டாளர் | ப்ரிகேட் குழுமம் (இந்தியா), GIC (சிங்கப்பூர்) |
மேற்கோள்கள் | |
கட்டடம் 1[3] கட்டடம் 2[4] |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/20/WTCChennai_NorthTower.jpg/220px-WTCChennai_NorthTower.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/8/8d/WTCChennai_SouthTower.jpg/220px-WTCChennai_SouthTower.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/d6/WTC_Chennai_Small_tower.jpg/220px-WTC_Chennai_Small_tower.jpg)
மேற்கோள் தரவுகள்
தொகு- ↑ "World Trade Center Chennai 1". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
- ↑ "World Trade Center Chennai 2". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
- ↑ உலக வர்த்தக மையம், சென்னை at Emporis
- ↑ உலக வர்த்தக மையம், சென்னை at Emporis