சுமித்தைட்டு
சல்போவுப்புக் கனிமம்
சுமித்தைட்டு (Smithite) என்பது AgAsS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒரு சல்போவுப்பு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பின் அருகே உள்ள லெங்சன்பாக்கு கற்சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்டது. கனிமவியலாளர் ஆர் எச் சோலி என்பவரால் விவரிக்கப்பட்டது. மேலும் பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கனிமவியல் துறையில் உதவியாளராக இருந்த எர்பர்ட்டு சுமித்தின் நினைவாக சுமித்தைட்டு எனப் பெயரிடப்பட்டது.[2] சுமித்தைட்டு என்பது திரெக்மானைட்டின் இரண்டாவது. வடிவமாகும்.
சுமித்தைட்டு Smithite | |
---|---|
![]() சிவப்பு சுமித்தைட்டுடன் இம்கோபைட்டு | |
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்புக் கனிமம் |
வேதி வாய்பாடு | AgAsS2 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 246.92 கி/மோல் |
நிறம் | வெளிர் சிவப்பு (ஒளியில் வெளிப்பட்டால் ஆரஞ்சு) |
படிக இயல்பு | அறுகோண பிரமிடு |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | சரிபிளவு, (100) க்கு இணையாக |
மோவின் அளவுகோல் வலிமை | 1.5 – 2 |
மிளிர்வு | விடாப்பிடியானது |
கீற்றுவண்ணம் | செந்தூரம் |
ஒப்படர்த்தி | 4.88 |
மேற்கோள்கள் | [1] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சுமித்தைட்டு கனிமத்தை Sth[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Smithite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-27.
- ↑ Solly, RH (1905). "Some new minerals from the Binnenthal, Switzerland". Mineralogical Magazine 14 (64): 72–82. doi:10.1180/minmag.1905.014.64.03. Bibcode: 1905MinM...14...72S. https://rruff.geo.arizona.edu/doclib/MinMag/Volume_14/14-64-72.pdf.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.