சுபத்ரா திட்டம்

சுபத்ரா திட்டம் (Subhadra Yojana)(செப்டம்பர் 17, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது) என்பது 21 முதல் 60 வயதுடைய பெண்களுக்கு நேரடி நிதி உதவி வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒடிசா அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு பெண்களை மையமாகக் கொண்ட நலத்திட்டமாகும். பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த முயற்சி, ஒடிசா மாநிலம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயனளிக்கும் நோக்கம் கொண்டது.[1]

சுபத்ரா திட்டம்
பிரதமர் நரேந்திர மோதி செப்டம்பர் 17, 2024, அன்று ஒடிசாவில் துவக்கிவைத்தார்
நாடுஇந்தியா
Ministryபெண்கள், குழந்தைகள் மேம்பாடு
Key peopleநரேந்திர மோதி, மோகன் சரண் மாச்சி
துவங்கியதுசெப்டம்பர் 17, 2024
ஒடிசா
Budget₹55,825 கோடி (2024–2029)
தற்போதைய நிலைநடைமுறையில்
இணையத்தளம்subhadra.odisha.gov.in

குறிக்கோள்

தொகு

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம், பொருளாதார அதிகாரமளிப்பை ஊக்குவிப்பதே சுபத்ரா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் 2024–25 நிதியாண்டிலிருந்து தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு ₹50,000 பெறுவார்கள். இந்த நிதி, ரக்சா பந்தன், அனைத்துலக பெண்கள் நாளன்று, ஆண்டுக்கு ₹5,000 என்ற இரண்டு தவணைகளில், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படுகிறது.[2][3]

முக்கிய அம்சங்கள்

தொகு
  • தகுதி: பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 21 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் பிற அரசுத் திட்டங்களின் கீழ் மாதத்திற்கு ₹1,500க்கு மேல் பெறும் பெண்கள் தகுதியற்றவர்கள்.
  • தவணைகள்: தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுதோறும் ₹10,000 இரண்டு தவணைகளாக ₹5,000 வீதம் பெறுவார்கள்.
  • கால அளவு: ஐந்து ஆண்டுகள் (2024–2029)
  • பதிவு: இந்தத் திட்டத்திற்கான பதிவு செப்டம்பர் 1, 2024 அன்று தொடங்கியது. ஏற்கனவே 50 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனாளிகளாகப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்வதற்கு எந்தக் காலக்கெடுவும் இல்லை. இது அதிகபட்ச பங்கேற்பை உறுதி செய்கிறது.
  • ஊக்கத்தொகை: ஒவ்வொரு கிராம ஊராட்சி, நகர்ப்புறப் பகுதியிலும் அதிக எண்ணிமப் பரிவர்த்தனைகளைக் கொண்ட முதல் 100 பயனாளிகளுக்குக் கூடுதலாக ₹500 வழங்கப்படும்.
  • கடன் அட்டை: பயனாளிகளுக்குத் தடையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக்க "சுபத்ரா கடன் அட்டை" வழங்கப்படுகிறது.

செயல்படுத்தல்

தொகு

நிதியைத் திறம்பட வழங்குவதை உறுதி செய்வதற்காக, ஜாம் மும்மூர்த்தியை (ஜன் தன்-ஆதார்-திறன்பேசி) பயன்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறப் பயனாளிகள் மின்னணுவாக வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல் படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும். செப்டம்பர் 17, 2024 நிலவரப்படி, பதிவுசெய்யப்பட்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு ₹1,250 கோடி பணம் பரிமாற்றப்பட்டது.[4][5]

அரசியல், பொருளாதாரத் தாக்கம்

தொகு

சுபத்ரா திட்டம் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகும். இத்திட்டம் புரி ஜெகநாதரின் சகோதரியான தேவி சுபத்ராவின் பெயரால் அழைக்கப்படுகிறது. எனவே இது ஒடிசாவின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. இது பிஜு ஜனதா தளத்தின் சக்தி திட்டத்திற்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்தது.[6]

இத்திட்டத்தின் காரணமாக ₹55,825 கோடி செலவாவதால் பல்வேறு விளைவுகளை மொத்தமாக ₹2.5 இலட்சம் கோடியினை ஒடிசாவின் பொருளாதாரத்தில் விளையினை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றன.[7]

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Service, Express News (2024-09-17). "Modi to fulfil BJP's big promise with Subhadra rollout today". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
  2. "Subhadra Yojana: PM Modi launches Subhadra Yojana. Check installment amount, eligibility, benefits, registration details". Business Today (in ஆங்கிலம்). 2024-09-17. பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
  3. PTI. "PM Modi launches Odisha govt's 'Subhadra' scheme, railway, NH projects worth over Rs 3,800 cr". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
  4. "PM Modi Launches Subhadra Yojana, Railway, Highway Projects In Odisha". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
  5. "PM Modi launches flagship women empowerment scheme 'SUBHADRA' in Odisha". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
  6. "PM Modi Unveils Projects Worth Over Rs 3,800 Crore, Launches Odisha's Subhadra Scheme". News18 (in ஆங்கிலம்). 2024-09-17. பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
  7. "Odisha Subhadra Yojana : Apply Online". Yojana Bihar (in ஆங்கிலம்). 2024-09-17. பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
"https://ta.wiki.x.io/w/index.php?title=சுபத்ரா_திட்டம்&oldid=4207147" இலிருந்து மீள்விக்கப்பட்டது