சீதாதபத்திரை
சீதாதபத்திரை வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். மேலும் இவர் 'வெண்குடையின் தேவி' என போற்றப்படுகிறார். அசாதாராண ஆபத்துகளில் இருந்து காப்பாற்றக்கூடியவராக இவர் கருதப்படுகிறார்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/8/82/SitatapatraW2.jpg/220px-SitatapatraW2.jpg)
சீதாதபத்திரை புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலான பெண் போதிசத்துவர் ஆவார். இவர் அவலோகிதேஷ்வரரின் பெண் இணையாக கருதப்படுகிறார். அவலோகிதேஷ்வரரைப் போலவே இவரும் ஆயிரம் தலைகள், ஆயிரம் கை-கால் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். இல்லையெனில் எளிய வடிவில் ஒரு அழகான பெண்ணாக காட்சியளிக்கிறார். இவர் வெண்குடையுடன் தொடர்பு படுத்தப்படுகிறார்.