சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (GSMCH) 2012-13 கல்வியாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட தமிழக அரசின் மருத்துவக் கல்லூரியாகும். இக்கல்லூரி ஆண்டுதோறும் மருத்துவப் படிப்பிற்காக 100 இடங்களைக் கொண்டுள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியுடன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1]
![]() | |
நிறுவப்பட்டது | 2012 |
---|---|
வகை | அரசினர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை |
துறை முதல்வர் | அ. கார்த்திகேயன், MD(FM) |
நிருவாகம் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு அரசு |
ஆசிரியர்கள் | 200 (தோராயமாக) |
பணியாளர்கள் | 600 (தோராயமாக) |
பட்டப்படிப்பு | 100 பேர் (ஒரு ஆண்டிற்கு) (MBBS) |
அமைவு | சிவகங்கை, தமிழ்நாடு, ![]() (9°50′15.62″N 78°28′44.64″E / 9.8376722°N 78.4790667°E) |
வளாகம் | நகர்ப்புறம் |
விளையாட்டு விளிப்பெயர் | GSMCH |
இணைப்புகள் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://sgmcsg.ac.in/ |
அமைவிடம்
தொகுசிவகங்கை தொண்டி சாலையில் வாணியங்குடியில் 30 ஏக்கர் பரப்பளவில் சுமார் 114 கோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to Sivagangai Medical College". sgmcsg.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.
- ↑ "Welcome to Sivagangai Medical College". sgmcsg.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.