சாமுண்டி தேவ நாயகர்
சாமுண்டி தேவ நாயகர் என்பவர் புறப்பொருள் வெண்பாமாலைக்கு உரையெழுதிய உரையாசிரியர்களில் ஒருவராவார்.[1] இவர் மாகறல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவ்வூர், சயங்கொண்ட சோழ மண்டலத்து மேற்கானாட்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டொன்று கூறுவதாகச் செந்தமிழ்த் தொகுதி கூறுகின்றது.
சாமுண்டி தேவ நாயகர் | |
---|---|
பிறப்பு | மாகறல் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | புறப்பொருள் வெண்பாமாலைக்கு உரை இயற்றியது |
சயங்கொண்ட சோழமண்டலத்து மேற்கானாட்டு
மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயகர்
"கிழார்" என வருவதைக் கொண்டு இவர் வேளாண் குடியினர் எனக் கருதப்படுகிறது. இவரது காலம் பொ.ஆ.13 அல்லது பொ.ஆ.14-ம் நூற்றாண்டு எனக் குறிப்பிடப்படுகிறது.