சாங்கிலி சமஸ்தானம்
சாங்கிலி சமஸ்தானம் (Sangli State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சாங்கலி நகரம் ஆகும். இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் சாங்கலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சாங்கிலி சமஸ்தானம் 2880 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,37,268 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.[1] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
Warning: Value not specified for "common_name" | |||||
சாங்கிலி சமஸ்தானம் | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
![]() | |||||
வரலாற்றுக் காலம் | குடிமைப்பட்ட கால இந்தியா | ||||
• | நிறுவப்பட்டது | 1782 | |||
• | இந்தியப் பிரிவினை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | |||
Population | |||||
• | 1901 | 1,37,268 | |||
தற்காலத்தில் அங்கம் | சாங்கலி மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/6/6a/Sangli_State_5R_Court_Fee_on_50R_stamp_paper_1934.jpg/220px-Sangli_State_5R_Court_Fee_on_50R_stamp_paper_1934.jpg)
வரலாறு
தொகுமராத்தியப் பேரரசின் பகுதியாக இருந்த சாங்கிலி சிற்றரசு, மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 5 மே 1819 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சாங்கிலி இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.
சாங்கிலி சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் தக்காண முகமையில் இணைக்கப்பட்ட சாங்கிலி சமஸ்தான மன்னர்களுக்கு, பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சாங்கிலி சமஸ்தானம் பம்பாய் மாகாணத்த்தின் சாங்குலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.