சலவைத்தூள்
சலவைத் தூள் (laundry detergent) என்பது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை வேதிப்பொருள் ஆகும். இது பொதுவாக அல்கைல் பென்சீன் சல்போனேற்று எனும் வேதிப்பொருளை முதன்மைப் பொருளாகக் கொண்ட கலவைப் பொருளாகும். வன்மையான நீரிலும் இலகுவாகக் கரையும் இது பொதுவில் தூள் வடிவில் கிடைக்கும். 1950களில் திரவ வடிவிலான தூய்தாக்கிகளின் அறிமுகம் பாரிய சந்தை வாய்ப்புகளை வழங்கியது[1]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/7/7a/Plastic_spoon_n_Laundry_detergent_n_Washing_powder_in_white.jpg/200px-Plastic_spoon_n_Laundry_detergent_n_Washing_powder_in_white.jpg)