சர்தார் அம்ஜத் அலி
சர்தார் அம்ஜத் அலி (Sardar Amjad Ali)(பிறப்பு 1943) ஒரு இந்திய அரசியல்வாதியும் அரசதந்திரியும் ஆவார். கீழை இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர். வங்காள காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி 1970-ஆம் ஆண்டில் பாசிர்ஹாட்டில் இருந்து மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார். இவர் 1972-ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி குடும்பத்தின் நெருங்கிய உதவியாளரான இவர், 9 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டார். இவர் பார் கவுன்சிலின் தலைவராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார். [1] [2] [3] இவர் 2010-ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். இவர் 2011- ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாசிர்ஹட் உத்தர் தொகுதியில் போட்டியிட்டார். [4] [5] இவர் 1972 முதல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் [6]
சர்தார் அம்ஜத் அலி | |
---|---|
மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1970–1972 | |
மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1972–1978 | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
- ↑ "Bengal Congress leaders want state unit chief replaced | India News - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
- ↑ "Shri Sardar Amjad Ali MP biodata Basirhat | ENTRANCEINDIA". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
- ↑ "হাইকোর্টেও শক্তি বৃদ্ধি তৃণমূলের, ঘাসফুল শিবিরে আইনজীবী সরদার আমজাদ আলী-অশোক কুমার ঢনঢনিয়া". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
- ↑ "Sardar Amjad Ali(All India Trinamool Congress(AITC)):Constituency- BASIRHAT UTTAR(NORTH 24 PARGANAS) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
- ↑ "Members of Rajya Sabha".