சமுனாமரத்தூர்
சமுனாமரத்தூர் (Jamunamarathoor) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின் சவ்வாது மலையில் இருக்கும் புகழ் பெற்ற ஊராகும். மேலும் இது ஜவ்வாது மலையின் முக்கிய சந்தை பகுதியும், மக்கள் கூடும் இடமும் ஆகும்.
சமுனாமரத்தூர் | |
---|---|
மலைவாழிடம் | |
ஆள்கூறுகள்: 12°35′50.3″N 78°53′16.1″E / 12.597306°N 78.887806°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
ஏற்றம் | 780 m (2,560 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 9,861 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | 04181 |
அமைவிடம்
தொகுசமுனாமரத்தூர் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலையிலிருந்து 76 கிமீ தொலைவிலும், போளூரிலிருந்து 44 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 68 கிமீ தொலைவிலும், செங்கத்திலிருந்து 48 கிமீ தொலைவிலும், கலசப்பாக்கத்திலிருந்து 52 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 83 கிமீ தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 53 கிமீ தொலைவிலும், வாணியம்பாடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
நிர்வாகம் மற்றும் அரசியல்
தொகுசமுனாமரத்தூர் நகரம் கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகற்கும் உட்பட்டதாகும். இந்த நகரத்தை கோவிலூர் ஊராட்சியின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
வருவாய் வட்டம்
தொகுதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் சமுனாமரத்தூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தை 2016 ஆம் ஆண்டு போளூர் வட்டத்தின் மேற்கு பகுதிகளையும் மற்றும் செங்கம் வட்டத்தின் வடக்கு பகுதிகளையும் கொண்டு இந்த வட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 42 வருவாய் கிராமங்களையும், 47,271 மக்கள்தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் சமுனாமரத்தூர் மற்றும் சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
சாலை வசதிகள்
தொகுசமுனாமரத்தூரில் சாலை வசதிகள் பொறுத்த வரை மலைகளின் நடுவே வலை பின்னலாக அமைந்துள்ளது.
- சமுனாமரத்தூர் - அமிர்தி சாலை
- ஆரணி - போளூர் - சமுனாமரத்தூர் சாலை
- திருவண்ணாமலை - போளூர் - சமுனாமரத்தூர் சாலை
- செங்கம் - சமுனாமரத்தூர் சாலை
- சமுனாமரத்தூர் - ஆலங்காயம் - வாணியம்பாடி சாலை
- திருப்பத்தூர் - ஆலங்காயம் - சமுனாமரத்தூர் சாலை
- சமுனாமரத்தூர் - ஆலங்காயம் - ஒடுகத்தூர் - அணைக்கட்டு - வேலூர் சாலை
ஆகிய முக்கிய சாலைகள் சமுனாமரத்தூர் நகரை இணைக்கிறது.
போக்குவரத்து வசதிகள்
தொகுசமுனாமரத்தூர் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஆலங்காயம், திருப்பத்தூர், போளூர், ஆம்பூர், வாணியம்பாடி, கலசப்பாக்கம் ஆகிய நகரங்களில் இருந்து நேரடியாக பேருந்து சேவைகள் உள்ளது.
மக்கள் தொகை
தொகு2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 6,000 மக்கள் வாழ்கிறார்கள். மேலும் இது சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு