டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்

(சண்டெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சண்டெல் இலங்கையில் தொலைத் தொடர்புகளை வழங்கும் நிறுவனமாகும். இது இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்பட்டு வருகின்றது. 2005 ஆம் ஆண்டு CDMA தொழில் நுட்பத்தில் தொலைபேசிச் சேவைகளை ஆரம்பித்ததில் இருந்து செப்டம்பர் 26, 2006 கணக்கெடுப்பின் படி 155 தொலைத் தொடர்புக் கோபுரங்களையும் 250, 000 இற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. 2005 இல் 70, 000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள சண்டெல் மார்ச் 2007 இன்படி 300 ,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளரை அடைந்த வளர்ச்சிக்கு CDMA இணைப்புகளே காரணமாகும். அகன்ற அலை (Broad Band) இணைப்புகள் வழங்குவதற்கு சண்டெல் திட்டமிடப்பட்டுள்ளன. டயலொக் அக்சிதா பிஎல்சி 2012 ஆம் ஆண்டில் சண்டெல்லைக் கையகப்படுத்தியது. தற்போது அதன் துணை நிறுவனமான டயலொக் பிராட்பேண்ட் நெட்வொர்க்ஸ் மூலம் இயக்கப்படுகிறது.[1]

வரையறுக்கப்பட்ட சண்டெல்
வகைவரையறுக்கப்பட்ட தனியார்
வர்த்தகப் பெயர்Dialog Axiata
நிறுவுகை1996
தலைமையகம்இலங்கை
முதன்மை நபர்கள்திரு. ஜெரெமி ஹஸ்ரபிலி, பிரதான நிறைவேற்று அதிகாரி
தொழில்துறைதொலைத்தொடர்புகள் சேவை
உற்பத்திகள்நிலையான கம்பியற்ற இயக்குனர்கள்
மொத்த பங்குத்தொகைஎயார்டெல் (இலங்கை) டயலொக்
இணையத்தளம்www.suntel.lk சண்டெல்

இணைய சேவை

CDMA இணைப்பு

சாதாரணமாக CDMA தொலை பேசிகள் (அஜி மற்றும் சற்டியி) 115.2 கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்திலும் ஹூவாவி ரக CDMA தொலைபேசிகள் 230.4 கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்திலும் இணைகின்றது. மடிமேற் கணினிகளில் பாவிக்கக் கூடிய PCMCIA Card ஆகவும் CDMA தொலைபேசி கிடைக்கின்றது. இத் தொலைபேசியூடாக 230.4கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்தில் இணையமுடியுமெனினும் இதன் இணையக் கட்டணம் அதிகமானது. இதைவிட மைக்ரோசாப்ட் ரவுட்டிங்கும் ரிமோட் அக்கஸஸ் (Routing and Remote Access) முறையில் இரண்டு தொலைபேசிகளூடாக இணைந்தால் கட்டணம் குறைவாக இருக்கும்.

சாதாரண தொலைபேசிகள்

இவை ஆரம்பத்தில் அறிமுகப் படுத்தப் பட்டவை இவை 56 கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்தில் இணையுமெனினும் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 16-22 கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்திலேயே இணைகின்றன. இவை இணையப் பாவனைக்குப் பொருத்தமற்றன.

குறுஞ்செய்திகள்

சாதாரண CDMA தொலைபேசியில் ஒருங்குறிக்கு ஆதரவு கிடையாதெனினும் மடிமேற்கணினியில் ஒருங்குறிக்கான ஆதரவுண்டு. இதில் நேரடியாகவே எ-கலப்பை போன்ற மென்பொருட்களூடாக குறுஞ்செய்தியைத் தயாரித்து அநுப்பமுடியும். இலங்கையில் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கான கட்டணம் இலங்கை ரூபா 1 (வரியுடன் 1 ரூபா 15 சதம்).

இலக்கங்கள்

இதன் தொலைபேசி இலக்கங்கள் யாவும் 4 இல் ஆரம்பிக்கும் எடுத்துக் காட்டாக திருகோணமலை சண்ரெல் தொலைபேசி 026 (திருகோணமலைக் குறியீடு) - 4xxxxxx என்றவாறு இருக்குமெனினும் வாடிக்கையாளர்கள் தொலைபேசியை எங்கு தூக்கிச் சென்றாலும் வேலை செய்யும் என்பதால் மாவட்டக் குறியீடுகள் எந்த அளவிற்குப் பொருத்தம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வாடிக்கையாளர் சேவை

  • தொலைபேசி வாடிக்கையாளர் சேவை இலக்கம் : 4747474 (சண்டெல் தொலைபேசியில் இருந்து) ஏனையவற்றில் இருந்து 011-4747474
  • இணைய வாடிக்கையாளர் சேவை: 011-4629629 (சண்டெல் வாவ் இணைப்பு)

மேற்கோள்கள்

  1. "Suntel and Dialog Broadband to Merge Operations". www.dialog.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.

வெளி இணைப்புகள்

  • சண்டெல்