கொல்கத்தா பிரியாணி
![]() கொல்கத்தா பிரியாணி ஆட்டு இறைச்சி, முட்டை, உருளைக்கிழங்குடன் | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | கொல்கத்தா |
முக்கிய சேர்பொருட்கள் |
|
கொல்கத்தா பிரியாணி (Kolkata biryani) என்பது முகலாய உணவு வகைகளிலிருந்து தோன்றிய ஓர் உள்ளூர் பாரம்பரியமான காரமான அரிசி சார்ந்த உணவாகும்.[1] இந்த உணவின் பெயர் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரத்திலிருந்து வந்தது. அரிசி அடிப்படை மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுத்தி பிரியாணி தயாரிக்கப்படுகிறது. அரிசியுடன் இறைச்சி, முட்டை, உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இது உருளைக்கிழங்கைப் பயன்படுத்துவதன் மூலம் மற்ற வகைப் பிரியாணிகளிலிருந்து மாறுபட்டு, பெயர் பெற்றது. மேலும் மசாலா பொருட்களின் கலவைக்கும் பிரபலமானது.
பிரியாணியின் சரியான தோற்றம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், இது ஈரானில் தோன்றியதாக நம்பப்படுகிறது.[1] நவீனக் கால "பிரியாணி" என்று அழைக்கப்படும் உணவு முகலாயர் காலத்தில் தில்லியில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை வரலாற்றாசிரியர்களும் நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். கொல்கத்தா பாணி பிரியாணி 1850கள் மற்றும் 1860களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1]
கொல்கத்தா பிரியாணி கொல்கத்தா நகரத்திலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மிகவும் பிரபலமானது, கொல்கத்தா பெருநகரப் பகுதிக்கு வெளியே மேற்கு வங்கம் முழுவதும் பிரபலமானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Srividya 2017, ப. 32.
நூல் பட்டியல்
தொகு- Srividya, V. (15 November 2017). Tracing the Trails of the Nawabi Dish – Biryani (Technical report). University of Delhi.
- Pal, Dr. Arghya (2022). Tracing the Trails of the Nawabi Dish – Biryani (Technical report). All India Institute of Medical Sciences, Raebareli.