கைரேகை சாத்திரம்

கைரேகை சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது கை ரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும். கைரேகை வாசிப்பு அல்லது குறிசொல்லுதல் என்றும் அழைக்கப்படும். இந்த நடைமுறை உலகம் முழுவதும் பல கலாச்சார மாறுபாடுகளுடன் காணப்படுகிறது. இவ்வாறு குறிசொல்லும் பழக்கமுடையவர்கள் பொதுவாக கைரேகை ஜோதிடர்கள், கைரேகை படிப்பவர்கள் அல்லது குறிசொல்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்..

ஒரு நபரின் இடது உள்ளங்கையிலுள்ள கோடுகள் மற்றும் மேடுகளைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைச் சொல்லும் கலை
தி சைக்கனமி ஆஃப் தி ஹேண்ட் என்ற அமைப்பின் இலச்சினை

வெவ்வேறு கைரேகை சோதிட "முறைகளுக்கு" இடையே வெவ்வேறு போக்குகள் இருக்கின்றன. அதேபோன்று, பல்வேறு கைரேகை முறைகள் குறித்து பல மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன. பொதுவாக இந்த கருத்துக்கள் முரண்பாடுகளாகவே இருக்கின்றன. வெவ்வேறு விளக்கங்களுக்கு இடையிலான கைரேகை கணிப்புகளுக்கு சான்றுகள் இல்லாததால் இது ஒரு போலி அறிவியலாக பரவலாக பார்க்கப்படுகிறது.[1][2]

வரலாறு

தொகு
 
கரவாஜியோ என்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தி பார்ச்சூன் டெல்லர் என்ற ஓவியத்தில் கைரேகை சாத்திரத்தைப் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.
 
என்ரிக் சிமோனெட் வரைந்த பார்ச்சூன் டெல்லர் ஓவியத்தில் கைரேகை பார்க்கும் ஓவியம், 1899

பண்டைய கைரேகை சாத்திரம்

தொகு

ஐரோவாசிய நிலப்பரப்பில் உள்ள பல்வேறு இடங்களில் கைரேகை சாத்திரம் என்பது பொதுவான ஒரு நடைமுறையாகும். இது சுமேரியா, பாபிலோனியா, அரேபியா, கானான், ஈரான், இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கலாச்சாரங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.[3]

குத்தூசி மருத்துவ நிபுணர் யோஷியாகி ஓமுரா இந்து சோதிடம் , சீன யிஜிங் (ஐ சிங்) மற்றும் உரோமானி சோதிடம் ஆகியவற்றில் இதன் வேர்களை விவரிக்கிறார்.[4] பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்து முனிவர் வால்மீகி 567 பத்திகளை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை எழுதியதாக கருதப்படுகிறது. இதன் தலைப்பு ஆங்கிலத்தில் தி டீச்சிங்ஸ் ஆஃப் வால்மீகி மகரிஷி ஆன் மேல் பாமிஸ்ட்ரி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[5][6]  பண்டைய காலங்களிலிருந்து, கைரேகை சாமுத்ரிகா சாத்திரத்தின் ஒரு கிளையாகக் கருதப்படுகிறது. இதில் சோதிடம் மற்றும் கைரேகை போன்ற ஒரு நபரின் உடல் முழுவதும் பற்றிய ஆய்வுகள், அத்துடன் மண்டை ஓடு மற்றும் முக வாசிப்பு ஆகியவை அடங்கும்..[7][8] இந்தியாவில் இருந்து, கைரேகை கலை சீனா, திபெத் மற்றும் ஐரோப்பா பிற நாடுகளுக்கு பரவியது.[4][9]

சீனாவில் இருந்து கைரேகை சாத்திரம் , கிரேக்கத்திற்கு முன்னேறி சென்றதாகவும், அங்கு அனாஸ்சகோராஸ் (Anaxagoras) இதை பயின்றார் என்றும் கூறப்படுகிறது.[4] அரிசுட்டாட்டில் (கி.மு 384-322) எர்மெசுவின் பலிபீடத்தில் கைரேகை பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அதை அவர் பேரரசர் அலெக்சாந்தருக்கு (கி.மு 356-323) வழங்கினார். அலெக்சாண்டர் தனது அதிகாரிகளின் கைகளில் உள்ள வரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்களின் குணாதிசயங்களை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.[10]

மறுமலர்ச்சி மந்திரக் கலைகளில் கைரேகை சாத்திரம் ஏழு "தடைசெய்யப்பட்ட கலைகளில்" ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது. [11] 16-ஆம் நூற்றாண்டில், கைரேகைக் கலை கத்தோலிக்க திருச்சபையால் தீவிரமாக ஒடுக்கப்பட்டது. நான்காம் திருத்தந்தை பால் மற்றும் ஐந்தாம் திருத்தந்தை சிக்ஸ்டஸ் இருவரும், கைரேகை உட்பட பல்வேறு வகையான கணிப்புகளுக்கு எதிராக ஆணைகளை வெளியிட்டனர்.[12]

விஞ்ஞானமும், விமர்சனமும்

தொகு

அறிவியல் இலக்கியம் கைரேகை ஒரு போலி அறிவியல் அல்லது மூடநம்பிக்கை என்று கருதுகிறது.[13] மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள், கைரேகை பார்ப்பவர்களைப் பொதுவாக ஏமாற்றுக்காரர்களின் பட்டியலிலேயே சேர்க்கிறார்கள். இவர்கள் மனதைப் படிக்கும் உத்தியைப் பயன்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மனதைப் படிக்கும் உத்தியானது, கைரேகை பார்ப்பவர்கள் உட்பட, உளவியலில் அனைவரும் பயன்படுத்தும் உத்தியாக மேற்கோளிட்டுக் காட்டப்படுகிறது..[14][15]

ஒருவரின் ஆயுள் அல்லது குணத்தின் அடிப்படையில், கைரேகை பார்ப்பவர்களை ஆதரித்து இதுவரை இந்த தீர்க்கமான தகவலும் கிடைக்கவில்லை.

இதனையும் காண்க

தொகு

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Park, Michael Alan (1986). "Palmistry or HandJive?". In Frazier, Kendrick (ed.). Science Confronts the Paranormal. Prometheus. pp. 198–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61592-619-0.
  2. Chamorro-Premuzic, Tomas; Furnham, Adrian (2010). The Psychology of Personnel Selection. Cambridge University Press. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-86829-7. A more popular pseudoscience is chiromancy (or palmistry), the art of characterisation and foretelling the future through the study of the palm.
  3. Dwivedi 1970
  4. 4.0 4.1 4.2 Omura 2003 According to this theory, palmistry developed in India and then extended across the world.
  5. Dwivedi 1970
  6. Sharma 1995
  7. Modern Asian Studies Volume 41 (in English). Cambridge University Press. 2007. p. 504.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  8. Robert Svoboda & Hart De Fouw - Light On Life (in English). Lotus Press. 2003. pp. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-940985-69-1.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  9. Chinn 2000: "It was not until the mid- to late nineteenth century that palmreading took off in Britain, France and the United States thanks to three major figures: Casimir Stanislas d'Arpentigny, Edward Heron-Allen and Cheiro."
  10. Benham, William George (1900). The Laws of Scientific Hand Reading: A Practical Treatise on the Art Commonly Called Palmistry (in ஆங்கிலம்). Putnam.
  11. Johannes Hartlieb (Munich, 1456) The Book of All Forbidden Arts; quoted in Láng, p. 124.
  12. Byrne, Laura (8 October 2013). "Palm Reading". 1000 Things. Royal Academy of Fine Art in The Hague. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  13. Preece, P. F.; Baxter, J. H. (2000). "Scepticism and gullibility: The superstitious and pseudo-scientific beliefs of secondary school students". International Journal of Science Education 22 (11): 1147–1156. doi:10.1080/09500690050166724. Bibcode: 2000IJSEd..22.1147P. https://archive.org/details/sim_international-journal-of-science-education_2000-11_22_11/page/n18. 
  14. Vernon, David (1989). Donald Laycock; David Vernon; Colin Groves; Simon Brown (eds.). Skeptical – A Handbook of Pseudoscience and the Paranormal. Canberra: Imagecraft. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7316-5794-2.
  15. Steiner, Bob. (2002). Cold Reading. In Michael Shermer. The Skeptic Encyclopedia of Pseudoscience. ABC-CLIO. pp. 63–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-654-7
  16. Sara Sirolli (2008). "Palmistry diagram of hand".

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chiromancy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wiki.x.io/w/index.php?title=கைரேகை_சாத்திரம்&oldid=4174338" இலிருந்து மீள்விக்கப்பட்டது