கைகேயி
கைகேயி, கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகளும், இராமாயணக்கதையில் வரும் தசரத மன்னனின் மூன்றாம் மனைவி ஆவார். பரதன் இவருடைய மகன் ஆவார்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/e6/Kaikeyi_told_that_according_to_the_two_boons_granted_by_Dasaratha_Rama_should_go_to_the_forest_for_14_years_and_Bharata_must_become_the_king.jpg/220px-Kaikeyi_told_that_according_to_the_two_boons_granted_by_Dasaratha_Rama_should_go_to_the_forest_for_14_years_and_Bharata_must_become_the_king.jpg)
ஒருமுறை போரில் தேரை ஓட்டி தசரத மன்னனின் உயிரை இவர் காப்பாற்றினார். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார். இராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனி எனப்படும் மந்தரையின் தூண்டுதலால் இந்த வரங்களின் துணையோடு, ஆட்சிப் பொறுப்பை தன் மகன் பரதனுக்கும், பதினான்கு ஆண்டு வனவாசத்தை இராமனுக்கும் பெற்றுத் தந்தாள்.[1]