கூட்டமைவு (காண்கலைகள்)
காண்கலைகளில், சிறப்பாக ஓவியம், வரைகலை வடிவமைப்பு, நிழற்படவியல், சிற்பம் ஆகியவை தொடர்பில், கூட்டமைவு என்பது ஒரு கலை ஆக்கத்தில் காட்சிக் கூறுகளைக் குறிப்பிட்ட இடங்களில் அமைப்பதைக் குறிக்கும். இதை, கலைக் கொள்கைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆக்கத்தின் கலைக் கூறுகளை ஒழுங்கமைப்பது எனவும் கூறலாம்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/5e/Jan_Vermeer_-_The_Art_of_Painting_-_Google_Art_Project.jpg/220px-Jan_Vermeer_-_The_Art_of_Painting_-_Google_Art_Project.jpg)
கூட்டமைவு என்பது பொதுவாக "ஒன்றாக அமைதல்" என்னும் பொருள் தருகிறது. இசை, எழுத்து போன்ற கலைகளிலும் ஆக்கங்களை உருவாக்குதல் அவற்றின் கூறுகளை ஒன்றாக அமைத்தல் என்பதால் கூட்டமைவு என்னும் கருத்துரு அவ்வாறான கலைகளுக்கும் பொருந்தும்.