குமட்டூர்க் கண்ணனார்
குமட்டூர்க் கண்ணனார் இடைக்கால புலவர்களில் ஒருவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சங்ககாலச் சேரமன்னரை இப்புலவர் பாடியுள்ளார்.[1] இவர் பாடிய அந்தப் பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் இரண்டாம் பத்தாக வைக்கப்பட்டுள்ளது.
குமட்டூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர் இவர். இவர் பெயர் கண்ணனார். குமட்டூர் என்பது பண்டைத் தமிழகத்து ஊர்களுள் ஒன்று. இந் நாளிலே, இப் பெயருடையதான ஊர் எது என்பது தெரியவில்லை.[2]
பாடிப் பெற்ற பரிசில்
தொகுகுமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து பாடியதால் உம்பற்காட்டையும் 500 ஊர்களையும் இறையிலி நிலமாகவும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 86-98.
- ↑ பதிற்றுப்பத்து, புலியூர்க் கேசிகன் தெளிவுரை, 2005, பாரி நிலையம்