கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 45 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீரப்பாளயத்தில் இயங்குகிறது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/2a/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.gif/220px-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.gif)
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,476 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 48,698 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 842 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகீரப்பாளயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விளாகம்
- வெள்ளியக்குடி
- வெய்யலூர்
- வயலூர்
- வடப்பாக்கம்
- வடஹரிராஜபுரம்
- வாக்கூர்
- துணிசிரமேடு
- தெற்குவிருதாங்கன்
- தென்ஹரிராஜபுரம்
- தரசூர்
- டி. நெடுஞ்சேரி
- டி. மணலூர்
- சிறுகாலூர்
- சேதியூர்
- செங்கல்மேடு
- சாத்தமங்கலம்
- சாக்காங்குடி
- பூர்த்தங்குடி
- பெருங்காலூர்
- பரதூர்
- பண்ணப்பட்டு
- பாளையன்சேர்ந்தங்குடி
- ஒரத்தூர்
- ஓடாக்கநல்லூர்
- முகையூர்
- மதுராந்தகநல்லூர்
- கூளப்பாடி
- கிளியனூர்
- கீரப்பாளையம்
- கீழ்நத்தம்
- கண்ணங்குடி
- கந்தகுமாரன்
- கலியமலை
- கே. ஆடூர்
- எண்ணாநகரம்
- இடையன்பால்சேரி
- தேவங்குடி
- சி. மேலவன்னியூர்
- பூதங்குடி
- அய்யனூர்-அக்காரமங்கலம்
- ஆயிப்பேட்டை
- பூந்தோட்டம்
- வாழக்கொல்லை
- சி. வீரசோழகன்
வெளி இணைப்புகள்
தொகு- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்