அனோ டொமினி
அனொ டொமினி (இலத்தீன்: சுருக்கம்: Anno Domini ; முழு: anno Domini nostri Jesu Christi) [1][2] என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும். இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும்[3], 'நமது கடவுளின் ஆண்டு' [4][5] என்றும் பொருள்பட வழங்கப்பட்டது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/1/1b/Scriptorium.jpg)
இதன் தமிழாக்கம் கிறிஸ்துவுக்கு பின் என்பதனால், கி.பி. என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.
இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525-ஆம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். இயேசு கிறிஸ்துவுக்கு முற்பட்ட (Before Christ) காலம் கிறிஸ்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. எனத் தமிழில் வழங்கப்படுகிறது.
அனொ டொமினி முறை கி.பி. 525-இல் பகுக்கப்பட்டாலும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின் பயன்படுத்தப்படவில்லை.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.thefreedictionary.com/Anno+Domini+nostri+lesu+Christi
- ↑ http://it.knowledgr.com/00000541/AnnoDomini
- ↑ "Anno Domini". Merriam Webster Online Dictionary. (2003). Merriam-Webster. அணுகப்பட்டது 2011-10-04. “Etymology: Medieval Latin, in the year of the Lord”
- ↑ "Online Etymology Dictionary". பார்க்கப்பட்ட நாள் 2011-10-04.
- ↑ Blackburn & Holford-Strevens 2003, ப. 782 "since AD stands for anno Domini, 'in the year of (Our) Lord'."
- ↑ Dick Teresi (July 1997). "Zero". The Atlantic. http://www.theatlantic.com/past/docs/issues/97jul/zero.htm.