காறல்மண்ண

கேரளத்தின் பாலக்காடு மாவட்ட சிற்றூர்

காறல்மண்ண (Karalmanna) என்பது கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாரதப்புழா ஆற்றின் துணை ஆறான தூத்தாவின் கரையில் உள்ள வள்ளுவநாட்டில் உள்ள ஒரு தென்னிந்திய கிராமம் ஆகும். இது அருகிலுள்ள சிறிய நகரங்களான செர்புலசேரி மற்றும் பெரிந்தல்மண்ணையுடன் (மலப்புறம் மாவட்டம்) சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

காறல்மண்ண
கிராமம்
அடைபெயர்(கள்): கலயுடே கலவரா
காறல்மண்ண is located in கேரளம்
காறல்மண்ண
காறல்மண்ண
கேரளத்தில் அமைவிடம்
காறல்மண்ண is located in இந்தியா
காறல்மண்ண
காறல்மண்ண
காறல்மண்ண (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°54′0″N 76°18′0″E / 10.90000°N 76.30000°E / 10.90000; 76.30000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679506
தொலைபேசி குறியீடு04662
வாகனப் பதிவுKL- 51
அருகில் உள்ள நகரம்செர்புலச்செரி
மக்களவைத் தொகுதிபாலக்காடு

கதகளி நடனம்

தொகு

கரல்மண்ணை பல கதகளி கலைஞர்களைப் ஈன்றுள்ளது. முந்தைய காலங்களில் அவர்களுக்கு பத்து கலை ஆதரவாளர்களான நம்பூதிரி மனை (உயர் சாதி நம்பூதிரி சமூகத்தின் மாளிகைகள்) ஆதரவளித்தது.

திருவிழாக்கள்

தொகு

சிவன் கோயிலில் அதன் வருடாந்திர உற்சவத்தின் (திருவிழா) ஒரு பகுதியாக கதகளி இரவுகளில் நடத்தப்படுகிறது. இந்த இடத்தை பூர்வீகமாகக் கொண்டவரான மறைந்த கோட்டக்கல் சிவராமன், தனது பெண் கதகளி பாத்திரங்களுக்காக அறியப்பட்டார். கதகளியின் கல்லுவாழி பாணியின் இலக்கணத்தை மறுவடிவமைத்து அதன் அழகியலை செம்மைப்படுத்திய பட்டிக்கம்தோடி இராவுன்னி மேனனின் சீடரான மறைந்த நடிகரும், நடனக் கலைஞருமான தெக்கின்கட்டில் இராமுன்னி நாயரின் பிறப்பிடம் காறல்மண்ண ஆகும். காறல்மண்ணயைச் சேர்ந்த இன்றைய கதகளி கலைஞர்களில் நரிப்பட்டா நாராயணன் நம்பூதிரி மற்றும் சதனம் பாசி ஆகியோர் அடங்குவர். நரிப்பட்டா இராஜூவைத் நவீன நாடக உலக அரங்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் திருச்சூரில் உள்ள தேசிய நாடக பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஆவார். காறல்மண்ணயில் கதகளி மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய கலைகள் குறித்து பல கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடக்கிறது. அவை பெரும்பாலும் உள்ளூர் கலாச்சார மன்றமான வாழெங்கடா குஞ்ஞு நாயர் நினைவு அறக்கட்டளையின் சார்பில் நடந்து வருகிறது. கதகளி சமரோகம் போன்ற கலாச்சார விழாக்களுக்கான இடமாக விளங்கிய ஒரு அரங்கத்தை (கிராமீனா வயனாசலா அல்லது கிராம நூலகத்திற்கு அருகில்) இது பின்னர் எழுப்பியது. இதன் அத்தியாயங்கள் இன்றும் முன்னணி மலையாள தொலைக்காட்சி சேனல்களான ஏசியானெட் மற்றும் பீப்பிள் டிவியால் தினமும் ஒளிபரப்பப்படுகின்றன. [1]

பிரபலங்கள்

தொகு

கரல்மண்ணை மறைந்த கலைஞரான ஏ. எஸ். நாயர் அல்லது ஏ. ஸ் என்று அழைக்கப்படும் அத்திப்பட்டா சிவராமன் நாயரின் சொந்த கிராமமாகும். 1980கள் மற்றும் 1990களில் புகழ்பெற்ற மலையாள வார இதழான மாத்ருபூமி அச்சப்பதிப்புவில் அவரது விளக்கப்படங்கள் அவருக்குப் பரவலான பாராட்டுகளைப் பெற்றன.

திருமுல்லப்புல்லி மகாதேவர் கோயில்

தொகு

கரல்மண்ணையின் திருமுல்லப்புல்லி சிவன் கோயில் [2] மிகவும் தனித்துவமானது. இந்தக் கோயில் பிரகாரத்தைச் சுற்றிலும் சில இணை தெய்வங்கள் உள்ளன.

காறல்மண்ணயின் பலதரப்பட்ட பக்தர்களுக்கு, திருமுல்லப்புல்லியின் சிவன் ஒரு பாதுகாவலராகவும், அருளாளராகவும் உள்ளார். அவர்களின் துயரமான காலங்களில் நம்பப்படும் ஒரே தெய்வமாக உள்ளார். கேரளாவின் வேறு சில சிவன் கோயில்களைப் போலவே திருமுல்லபுல்லியிலும் மிக முக்கியமான திருவிழா கும்ப மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு சரியாக எட்டு நாட்களுக்கு முன்பு தொடங்கும் ஆண்டு கோயில் திருவிழா ஆகும்.

திருவிழாக்கள்

தொகு
  • ஐயப்பன் விளக்குக் (கரல்மண்ணை கோயில் - 22/11/08, 19/11/10)
  • தூத்தாகில் பூரம் (மே 11 / 12-05-2018)
  • மகர சூவா
  • ஆராட்டு (கரல்மண்ணை சிவசேத்ரம் - 16/02/2008) ஏழு நாட்கள் திட்டம்
  • காளி கடவு (பகவதி பிரதிஷ்டா) - 15/3/2008
  • புத்தனாகாவு பக்கல் புரம் (செர்பலச்சேரி - 11/02/2009)
  • கலவேலா (செர்பலச்செரி -12/02/2009)

அருகிலுள்ள இடங்கள்

தொகு

செர்பலச்செரி - கிழக்கிலிருந்து 3 கி.மீ தொலைவு.
தூத்தா - மேற்கிலிருந்து 3 கி.மீ. தொலைவு
பெரிந்தல்மண்ணை - மேற்கிலிருந்து 17 கி.மீ. தொலைவு
கோயம்புத்தூர் - கிழக்கிலிருந்து 102 கி.மீ. தொலைவு
ஒற்றப்பாலம் - வடக்கிலிருந்து 21 கி.மீ. தொலைவு
வெள்ளிநேழி - கிழக்கிலிருந்து 9 கி.மீ. தொலைவு
அனமங்காடு - மேற்கிலிருந்து 6 கி.மீ. தொலைவு

வங்கி

தொகு
  • செர்பலச்செரி கூட்டுறவு வங்கி, கரல்மண்ணை கிளை

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=காறல்மண்ண&oldid=4201481" இலிருந்து மீள்விக்கப்பட்டது