காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்

வேலூர், காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம்

வேலூர் காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம் (Katpadi Junction, நிலையக் குறியீடு:KPD) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் நகரிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை - பெங்களூரு மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயில் சுத்தமாகவும் பராமரிக்கப்படும் இரயில் நிலையத்தில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் இரயில் நிலையங்களில் காட்பாடி இரயில் நிலையமும் ஒன்றாகும். இது கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் நெடுஞ்சாலை ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் சித்தூர் நெடுஞ்சாலையில் நகரின் வடக்கு இறுதியில் அமைந்துள்ளது.

வேலூர் காட்பாடி சந்திப்பு
தொடருந்து நிலையம்
காட்பாடி தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கடலூர்- திருவண்ணாமலை - வேலூர்- சித்தூர் நெடுஞ்சாலை, காட்பாடி, வேலூர், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்12°58′20″N 79°8′18″E / 12.97222°N 79.13833°E / 12.97222; 79.13833
ஏற்றம்213 மீட்டர்கள் (699 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை சென்ட்ரல் - பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்9
இணைப்புக்கள்Bus interchange
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுKPD
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சென்னை
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
வேலூர் காட்பாடி சந்திப்பு is located in தமிழ் நாடு
வேலூர் காட்பாடி சந்திப்பு
வேலூர் காட்பாடி சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
வேலூர் காட்பாடி சந்திப்பு is located in இந்தியா
வேலூர் காட்பாடி சந்திப்பு
வேலூர் காட்பாடி சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்


Katpadi Jn Railway station Board.
பெயர் பலகை

இட அமைப்பு

தொகு

இந்த நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 4 மற்றும் 5 நடைமேடைகள் வழியாக முதன்மையாக வேலூர் கண்டோன்மென்ட் தொடருந்து நிலையம் வழியாக தெற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் இரயில்கள் நின்று செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 150க்கும் அதிகமான பயணிகள் இரயில்கள் (இருபுறமும்) வேலூர்-காட்பாடி சந்திப்பு வழியாக செல்கின்றன. தளமேடை 1 முதல் 3வரை, சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பயணிகள் இரயில்கள் முதன்மையாக இயக்கப்படுகின்றன.[1][2]

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 329 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11]


வசதிகள்

தொகு
  • ஐ.ஆர்.சி.டி.சி மூலம் பராமரிக்கப்படும் உணவுத் தளம் 1 மற்றும் 2 தளங்களில் அமைந்துள்ளது.
  • நடைமேடை 1, 2 மற்றும் 3 தளங்களில் ஆவின் பால் சாவடி, காபி ஷாப்பிங், ஹோட்டல், புக் ஸ்டால் மற்றும் பழ ஸ்டால்கள் வரை புதுப்பித்தல் கடைகளும் உள்ளன.
  • கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் நடைமேடை 1, 2, 3 மற்றும் 5 ஆகிய இடங்களில் உள்ளன.
  • ஏ.டி.எம் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ளது.
  • டிஜிட்டல் போர்டு நடைமேடை 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் வந்து செல்லும் தொடருந்துகளின் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இட அமைப்பு உடன் காட்டுகிறது.
  • பார்சல் முன்பதிவு அலுவலகம், இரயில்வே அஞ்சல் சேவை (ஆர்.எம்.எஸ்) ஆகியவை இருக்கின்றன. உயரக மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள் காத்திருக்கும் அறைகள் நடைமேடை 1, 2 மற்றும் 3ல் உள்ளன.
  • பெண்களுக்கான தனி காத்திருக்கும் மண்டபம்.
  • இந்த நிலையத்தில் நடைமுறையில் முன்பதிவற்ற பயணிகளுக்கான ஐந்து நுழைவுச்சீட்டு சேவை முகப்புகள் உள்ளன. நீண்ட தொலைவு இரயில்களுக்கான ஏழு முன்பதிவு சேவைமுகப்புகள் (கவுன்டர்கள்) தனி கட்டிடத்தில், இரயில் நிலையத்தில் முதன்மை நுழைவாயிலில் அமைந்துள்ளது.
  • இரயில்வே காவல் நிலையம் (RPF) நடைமேடை எண்.1 இல் அமைந்துள்ளது.
  • பயணிகளின் பாதுகாப்புக்கு, தெற்கு இரயில்வே எல்லா தளங்களிலும் கேமராக்களை நிறுவியுள்ளது.
  • நடைமேடை 1இல் ஒரு CMC மருத்துவமனை உதவி மையம் செயல்படுகிறது.[12]

போக்குவரத்து

தொகு

காட்பாடி நிலையத்திலிருந்து 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியே இரயில் நிலையத்தை இணைக்கும் பஸ் வசதிகள் கிடைக்கின்றன. டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.  

இரயில் பயணிகள்

தொகு

சென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி சந்திப்புக்கு தினமும் சராசரியாக முன்பதிவு செய்யாத 2,280 பயணிகள், வேலூருக்கு வருகை தருகின்றனர்.

சான்றுகள்

தொகு
  1. "KPD / Katpadi to VLR / Vellore Cantt. - 14 Trains - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
  2. "MSB/Chennai Beach (8) Railway Station - Today's Train Arrival Timings - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
  3. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  4. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  5. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  6. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  7. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  8. https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
  9. https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
  10. https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=14090&id=0,4,268
  11. https://timesofindia.indiatimes.com/city/chennai/katpadi-rail-junction-work-to-be-completed-in-3-years/articleshow/98242587.cms
  12. "Yeshwantpur, Bangalore Cantonment to have food plazas soon - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2010-02-16. Archived from the original on 2013-10-31. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)