கலைமலர் (சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
"கலைமலர்" சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்திலிருந்து வெளிவந்த கலை, இலக்கிய மாத இதழ். மாதந்தோறும் வெளிவருவதாக குறிப்பிடப்பட்ட போதிலும்கூட, தொடர்ச்சியாக வெளிவரவில்லை. இடைக்கிடையே மொத்தம் எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. படைப்பிலக்கியத் துறையில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சிற்றிதழாகக் குறிப்பிடலாம்.
![](http://up.wiki.x.io/wikipedia/ta/thumb/9/9f/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.jpg/220px-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.jpg)
முதலாவது இதழ்
தொகு1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், இறுதி இதழ் 2005 செப்டம்பர் மாதத்திலும் வெளிவந்தது. இதன் பதிவிலக்கம் ISSN 1800-1009
பணிக்கூற்று
தொகுமாதாந்த கலை, இலக்கிய கல்விச் சஞ்சிகை.
நிர்வாகம்
தொகுபிரதம ஆசிரியர்: எம். வை. எம். மீஆது. இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞருமாவார். இச்சஞ்சிகை கேகாலை மாவட்டம் ஹெம்மாத்தகம விலிருந்து வெளிவந்தது.
சிறப்பு
தொகுகலை, இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த போதிலும்கூட, இதில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரின் பல்வேறுபட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
உள்ளடக்கம்
தொகுஇலக்கிய கட்டுரைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், நேர்காணல்கள், நூல்நயம், விழாநிகழ்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், வாசகர் பக்கம், அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில், தமிழ் சிங்கள இலக்கிய பாலம், நூலகப் பாரம்பரியம், மனையியல், சமயம், கலாசாரம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
ஆதாரம்
தொகு- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்