கரிமே அபூத்

பாலஸ்தீனத்த்தின் தொழில்முறை புகைப்படக் கலைஞர்

கரிமே அபூத் (Karimeh Abbud ) (1896-1940) இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து பணியாற்றிய பாலஸ்தீனிய தொழில்முறை புகைப்படக் கலைஞரும், ஓவியரும் ஆவார்.[1] பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கின் முதல் பெண் புகைப்படக் கலைஞர்களில் இவரும் ஒருவர்.[2]

கரிமே அபூத்
பிறப்பு(1893-11-18)18 நவம்பர் 1893
பெத்லகேம், பாலத்தீனம், உதுமானியப் பேரரசு
இறப்பு27 ஏப்ரல் 1940(1940-04-27) (அகவை 46)
பெத்லகேம், கட்டளைப் பலத்தீன்
தேசியம்பாலத்தீன அராபியர்
கல்விஅமெரிக்க பெய்ரூத் பல்கலைக்கழகம்
பணிபுகைப்படக் கலைஞர்

இளமை வாழ்க்கை

தொகு

கரிமே அபூத் பெத்லகேமில் பிறந்தார்.[3] இவரது தந்தை சையத் அபூத், லெபனானின் தெற்கில் உள்ள கியாமில் இருந்து பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்த பிறகு, பெத்லகேமில் ஆசிரியராக பணிபுரிந்தார். நூற்றாண்டின் தொடக்கத்தில், அவர் லூத்தரன் தேவாலயத்தின் போதகராக அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு பணிபுரிந்தார். கரிமே தனது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை. தனது தொடக்கக் கல்வியை “தலிதா கௌமி” பள்ளியில் முடித்தார். இவரது தாயார் பார்பரா பத்ருவும் ஒரு ஆசிரியராக இருந்தார்.

 
கரிமே அபூத் வரைந்த மேரி கிணற்றின் அஞ்சல் அட்டை

1913 ஆம் ஆண்டில் தனது 17 வது பிறந்தநாளுக்கு பரிசாக தனது தந்தையிடமிருந்து ஒரு ஒளிப்படக்கருவியைப் பெற்ற பிறகு இவர் முதன்முதலில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். குடும்பம், நண்பர்கள் மற்றும் பெத்லகேமில் உள்ள நிலப்பரப்பு ஆகியவற்றில் இவரது புகைப்பட ர்வம் இருந்தது. இவரது முதல் கையொப்பமிடப்பட்ட படம் அக்டோபர் 1919 தேதியிட்டது.[1]

லெபனானில் உள்ள அமெரிக்கன் பெய்ரூத் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தைப் படிக்கும்போது, அங்குள்ள தொல்பொருள் தளங்களை புகைப்படம் எடுப்பதற்காக இவர் பால்பெக் சென்றார்.

1929 ஆம் ஆண்டில், இவர் மர்ஜயோனைச் சேர்ந்த ஒரு வணிகரை மணந்தார். இவர்களுக்கு சமீர் என்ற மகன் இருந்தார்.[4]

புகைப்படத் தொழில்

தொகு

இவர் தனது வீட்டிலேயே ஒரு ஒளிப்பட அரங்கத்தினை அமைத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள், திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் புகைப்படம் எடுத்ததன் மூலம் பணம் சம்பாதித்தார். கைஃபா, நாசரேத்து, பெத்லகேம் மற்றும் திபேரியு ஆகிய இடங்களில் உள்ள பொது இடங்களின் ஏராளமான புகைப்படங்களையும் இவர் எடுத்தார்.[1] 1930 களில் இவர் நாசரேத்தில் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞராக பணியாற்றினார். இவரது தாத்தா நாசரேத் ஆங்கில மருத்துவமனையின் மூத்த மருந்தாளுநராக இருந்தார். இவரது தந்தை அங்கு போதகர் ஆக பணியாற்றி வந்தார். உள்ளூர் நாசரேத் புகைப்படக் கலைஞர் பாதில் சபா கைஃபாவிற்கு குடிபெயர்ந்தபோது, கரிமேயின் அரங்கத்தில் குறிப்பாக திருமணங்கள் மற்றும் உருவப்படங்களுக்கு அதிக தேவை இருந்தது. இந்தக் காலகட்டத்தில் இவர் எடுத்த படைப்புகள் அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் அஞ்சல் முத்திரையாக வெளியிடப்பட்டன. 1930 களின் நடுப்பகுதியில், இவர் தனது புகைப்படங்களின் கையால் வரையப்பட்ட நகல்களை வழங்கத் தொடங்கினார்.[1] 1924 ஆம் ஆண்டில், அபூத் தன்னை "ஒரே தேசியப் புகைப்படக் கலைஞர்" என்று விவரித்தார்.[4]

சேகரிப்பு மற்றும் கண்காட்சிகள்

தொகு

இவரது விரிவான புகைப்படங்களின் அசல் பிரதிகள் நாசரேத்து காப்பகங்கள் திட்டத்தின் இயக்குனர் அகமது ம்ரோவாத் என்பவரால் சேகரிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய தொல்பொருட்கள் சேகரிப்பாளரான பௌக்கி போஸ், எருசலேம் நகரில் ஒரு வீட்டில் அபுத்தின் 400 க்கும் மேற்பட்ட அசல் பிரதிகளைக் கண்டுபிடித்தார். அதன் உரிமையாளர்கள் 1948 இல் போரிலிருந்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்தும் தப்பி ஓடியிருந்தனர். இதில் பல படைப்புகள் கரிமே அபூத்தால் கையெழுத்திடப்பட்டது.[1] பீர்சேபாவிலுள்ள இசுலாமிய மற்றும் கிழக்கு கலாச்சார அருங்காட்சியகத்தில் கரிமே அபூத்தின் புகைப்படங்களின் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அட்டைகள், வரைபடங்கள், மசாலாப் பொருட்கள், புத்தகங்கள் மற்றும் உலர்ந்த பூக்கள் போன்ற நினைவு பரிசுகளை அடிப்படையாகக் கொண்ட பாலஸ்தீனத்திற்கான சுற்றுலாவை இந்த கண்காட்சி மையமாகக் கொண்டுள்ளது.[4]

அஞ்சலி

தொகு

18 நவம்பர் 2016 அன்று, கூகுள் இவரது 123 வது பிறந்தநாளை முன்னிட்டு கரிமே அபுத்துக்கு ஒரு டூடுலை அர்ப்பணித்தது. இந்த டூடுல் அரபு உலகின் அனைத்து நாடுகளிலும் பார்வையிடப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Ahmed Mrowat (Summer 2007). "Karimeh Abbud: Early Woman Photographer (1896-1955)". Jerusalem Quarterly (Institute of Jerusalem Studies) 31: 72–78. http://www.jerusalemquarterly.org/ViewArticle.aspx?id=52. பார்த்த நாள்: 2011-01-09. 
  2. Verde, Tom (April 2019). "Women Behind the Lens: The Middle East's First Female Photographers". Aramco World. பார்க்கப்பட்ட நாள் 6 July 2024.
  3. Raheb, Mitri (2011). Karīmah ʻAbbūd : rāʼidat al-taṣwīr al-niswī fī Filasṭīn, 1893-1940 كريمة عبود : رائدة التصوير النسوي في فلسطين، ١٨٩٣-١٩٤٠ [Karimeh Abbud: Pioneer of Female Photography in Palestine, 1893-1940] (in Arabic). Bethlehem: Diyār lil-Nashr. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789950376038.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 4.2 Aderet, Ofer (22 September 2022). "The Female Photographer Who Captured Palestinian Lives 100 Years Ago". Haaretz. பார்க்கப்பட்ட நாள் 6 July 2024.
  5. "Karimeh Abbud's 123rd Birthday". Google Doodles. 18 November 2016. https://doodles.google/doodle/karimeh-abbuds-123rd-birthday/. 

கரிமே அபூத் வரைந்த அஞ்சல் அட்டைகள், சுமார் 1925 முதல் 1930 வரை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=கரிமே_அபூத்&oldid=4205502" இலிருந்து மீள்விக்கப்பட்டது