சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திலுள்ள ஒர் ஊர் கண்டதேவி.

சிவன் கோயில்

தொகு

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் இங்கு அமைந்துள்ளது.

 
கண்டதேவி சிவன் கோயில்

இக்கோயில் இறைவன் சொர்ணமூர்த்தி எனவும் இறைவி பெரியநாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.எழிலாக அமைந்திருக்கும் ராஜ கோபுரத்தின் கிழக்கு முக விமானத்தில் வெள்ளையானையில் தேவேந்திரன் வீற்றிருப்பது இந்தக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று[1].

செம்பராங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோயிலை 19ஆம் நூற்றாண்டில் கற்றளியாக விரிவு படுத்தி அணியொட்டியக்கால் மண்டபம், திருச்சுற்று, முகப்பு மண்டபம், ராஜ கோபுரம் அமைத்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நந்தன வருடம் வைகாசி மாதம்(1892) குடமுழுக்கு செய்துள்ளனர். பின்னர் 01.02.1929இல் இரண்டாவது குடமுழுக்கு செய்துள்ளனர்.[2]

குளம்

தொகு

இவ்வூரின் நடுவே மிகப் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. இக்குளம் கண்டதேவி ஊருணி என அழைக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில், அமராவதிபுதூர் வயிநாகரம் முத்தையா செட்டியார் இவ்வூர் சிவாலய திருப்பணி செய்த போது இக்குளத்தை அமைத்துள்ளார்.[2]

தேர்

தொகு

இங்குள்ள சொர்ணமூர்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறும். ஆனால் தேரோட்டத்தின்போது பட்டியலின மக்கள் தேர் வடம் பிடிப்பதை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சிலர் எதிர்த்ததால் இங்கு பெரும் பிரச்சனை வெடித்தது. கடந்த 1998ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை மற்றும் 2003ம் ஆண்டும் தேரோட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பெரும் முயற்சியால் 2002, 2004, 2005, 2006 ஆகிய ஆண்டுகள் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து கோவில் திருப்பணி காரணமாக தேரோட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்தும் 2023 வரை தேரோட்டம் நடைபெறவில்லை.[3] அரசின் பல சமாதான முயற்சிகளுக்குப் பின் 2024ல் தேரோட்டம் நடைபெற்றது. https://www.thehindu.com/news/cities/Madurai/after-17-years-kandadevi-car-festival-conducted-peacefully-with-emotional-devotees-participating/article68315573.ece[4]

சான்றுகள்

தொகு
  1. https://wiseindhiran.blogspot.com/2025/01/blog-post_21.html
  2. 2.0 2.1 மு.கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு.
  3. "கண்டதேவி கோவில் தேரோட்டம் ரத்து". ONE INDIA TAMIL. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. https://www.thehindu.com/news/cities/Madurai/after-17-years-kandadevi-car-festival-conducted-peacefully-with-emotional-devotees-participating/article68315573.ece. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wiki.x.io/w/index.php?title=கண்டதேவி&oldid=4202769" இலிருந்து மீள்விக்கப்பட்டது