கணையாழி (இதழ்)
கணையாழி (Kanaiyaazhi) 1965 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரமான புது தில்லியிலிருந்து வெளிவந்த ஒரே தமிழ் பத்திரிகையாகும். நியூயார்க் டைம்சு இதழின் தில்லி நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கஸ்தூரி ரங்கன் கணையாழி இதழைத் தொடங்கினார்.[1]
1965 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை கணையாழி அரசியலை முதன்மை படுத்தியது. நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர்கள், அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியனவும் இதில் இடம்பெற்றிருந்தன. 1970 ஆம் ஆண்டிலிருந்து 1975 ஆம் ஆண்டு வரை அரசியலுடன் புதுக் கவிதைகளும் இடம்பெற்றன. கதைகள், நாடகங்கள், சமூகவியல் சிந்தனைகள் ஆகியவையும் இடம் பெற்றன. 1975 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரை கதைகளும் துணுக்குகளும் தொடர் கதைகளும் இடம்பெற்றன. 1980 -1985 காலத்தில் அரசியல் நீக்கப்பட்டு குறுநாவல்கள் இடம்பெறத் தொடங்கின. 1994 ஆம் ஆண்டு கலை இலக்கிய மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட தசரா அறக்கட்டளை 1995 ஆம் ஆண்டு முதல் கணையாழியை தொடர்ந்து வெளியிட்டது. தற்பொழுது கணையாழி பத்திரிகை இணைய இதழாக வந்து கொண்டிருக்கிறது.[2]
தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் இடம்பெறுகின்றன.
ஆசிரியர்கள்
தொகுதி. ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோர் கணையாழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள்.
மீண்டும் கணையாழி
தொகுஒரு சில ஆண்டுகளாக வெளியிடப்படாதிருந்த கணையாழி இதழ் 2011, ஏப்ரல் 14 முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. [3]இதன் புதிய ஆசிரியர் குழுவில் ம. இராசேந்திரன், கவிஞர் சிற்பி, மு. ராமசுவாமி, ட்ராட்ஸ்கி மருது, கி. நாச்சிமுத்து, பிரசன்னா ராமசாமி, சுபாஷினி ட்ரெம்மல் ஆகியோர் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கணையாழி பதித்த இலக்கியத் தடங்கள்த்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/Feb/16/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3098273.html. பார்த்த நாள்: 28 January 2025.
- ↑ "கணையாழி இணைய இதழ் இன்று முதல் வாசகர்களுக்காக..!". groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-28.
- ↑ "கணையாழி இதழ் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2011/Apr/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-339908.html. பார்த்த நாள்: 28 January 2025.