கட்லா மீன்
கட்லா | |
---|---|
இளம் கட்லா மீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | கெண்டைமீன்
|
பேரினம்: | கட்லா வாலென்சியன்சிசு, 1844
|
இனம்: | க. கட்லா
|
இருசொற் பெயரீடு | |
கட்லா கட்லா (பு. ஹாமில்டன், 1822) | |
வேறு பெயர்கள் | |
ஜிபெலியன் கட்லா |
கட்லா (Catla) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 5 அடி நீளமும், 45 கிலோ எடையளவும் வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.[1][2]
தோற்றம்
தொகுஇம்மீன் பெரிய தலையையும், மேல்நோக்கிய வாயையும், குறுக்குவாட்டத்தில் அகன்ற உடலையும் கொண்டது. இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த வெண்மையானது.[2]
உணவுப் பழக்கம்
தொகுஇதன் வாய் மேல்நோக்கியவாறு அமைந்துள்ளதால் நீரின் மேல்பரப்பில் உள்ள விலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இந்நுண்ணுயிர்களை சலிப்பதற்கு வசதியாக இம்மீனின் செவிள் கதிர்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. இது இயற்கை உணவைத்தவிர தரப்படும் மேல் உணவையும் (Supplementary food) உண்டு ஓர் ஆண்டில் 1 முதல் 1.5 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை[3]. சில குளங்களின் தண்ணீர் மற்றும் மண் தரத்திற்கேற்ப சில பருவகாலங்களில் 45 நாட்களில் 1.5 கிலோ எடை வரை வளரக்கூடியது.
இனப்பெருக்கக் காலம்
தொகுஇம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
உசாத்துணை
தொகுகாலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Tenzin, K. (2010). "Gibelion catla". IUCN Red List of Threatened Species 2010: e.T166425A6206451. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166425A6206451.en. https://www.iucnredlist.org/species/166425/6206451. பார்த்த நாள்: 6 December 2023.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2017). "Gibelion catla" in FishBase. September 2017 version.
- ↑ "கெண்டை மீன்கள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். 2014. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.