கஞ்சி (Congee) என்பது ஒரு வகை அரிசியில் தயாரிக்கப்படும் அடர்த்தியான உணவாகும்.கஞ்சி முதலில் இந்தியாவில் இருந்து பல ஆசிய நாடுகளில் பிரபலமானது. வெற்று அரிசி கஞ்சியாக சாப்பிடும்போது, இது பெரும்பாலும் பக்க உணவுகளுடன் வழங்கப்படுகிறது. கஞ்சி தயாரிக்கும் போது இறைச்சி, மீன் மற்றும் சுவைகள் போன்ற கூடுதல் பொருட்கள் சேர்க்கப்படும்போது, இது பெரும்பாலும் குறிப்பாக நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு ஒரு உணவாக வழங்கப்படுகிறது. கஞ்சிக்கான பெயர்கள் அதன் தயாரிப்பின் பாணியைப் போலவே வேறுபடுகின்றன. பல வேறுபாடுகள் இருந்தபோதிலும், இது வழக்கமாக அரிசியில் தயாரிக்கப்படும் அடர்த்தியான கஞ்சியாகும். இது நீரில் நீண்ட நேரம் சமைத்தபின் பெரும்பாலும் கஞ்சியாக சிதைந்துவிடும்.

தோற்றுவாய்கள்

தொகு

கஞ்சி என்ற சொல் தமிழ் மொழியான கஞ்சி என்பதிலிலிருந்து வருகிறது.[1][2] இது பண்டைய இந்தியாவின் பண்டைய தமிழ் மக்களின் முக்கிய உணவாக இருந்தது. இதன் ஆங்கில வடிவம் போர்த்துகீசிய வர்த்தகர்கள் வழியாக போர்த்துக்கேய மொழியில் வந்திருக்கலாம். கஞ்சி கூழ் போன்ற அதன் தோற்றம் காரணமாக வந்திருக்கலாம். தினை மூலம் செய்யப்பட்ட கஞ்சி என்பதை பண்டைய தமிழ் மக்கள் ஒரு மூலப் பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.[3] கஞ்சி சீரணிக்க எளிதானது மற்றும் சமைக்க மிகவும் எளிது.

தயாரிப்பு

தொகு

கஞ்சி தயாரிக்க, அரிசி கணிசமாக மென்மையாகும் வரை அதிக அளவு தண்ணீரில் வேகவைக்கப்படுகிறது. கஞ்சியை ஒரு பானையில் அல்லது அரிசி குக்கரில் தயாரிக்கலாம். சில அரிசி குக்கர்கள் "கஞ்சி" தயாரிப்பதற்காண அமைப்பைக் கொண்டுள்ளன. இது உடனடியாக சமைக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. கஞ்சி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிசி குறுகிய அல்லது நீண்ட அரிசியாக இருக்கலாம். இது கிடைக்கக்கூடிய மற்றும் பிராந்திய கலாச்சார தாக்கங்களைப் பொறுத்து இருக்கும். பெரும்பாலும் கஞ்சி சமைத்து உண்ணும் கலாச்சார முறையையே கொண்டுள்ளது.

சில இடங்களில், கஞ்சி முதன்மையாக காலை உணவு அல்லது தாமதமாக இரவு உணவாக உண்ணப்படுகிறது; மற்ற இடங்களில், இது அரிசிக்கு மாற்றாக உண்ணப்படுகிறது. இது பெரும்பாலும் நோயாளிகளுக்கு ஒரு இலேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாக கருதப்படுகிறது.[4]

நாடு வாரியாக

தொகு

பர்மா

தொகு

பர்மாவில் (இப்போது மியான்மர் என்று அழைக்கப்படுகிறது), அரிசி கஞ்சி என்று அழைக்கப்படுகிறது. அதாவது "வேகவைத்த அரிசி" என்பது பொருள்படும். இது மிகவும் மெல்லிய மற்றும் வெற்று கஞ்சியாகும். இது பெரும்பாலும் அரிசி மற்றும் தண்ணீரில் தயாரிக்கப்படுகிறது, ஆனால் சில நேரங்களில் கோழி அல்லது பன்றி இறைச்சி, நறுக்கப்பட்ட வெங்காயம் அல்லது மிருதுவான வறுத்த வெங்காயத்தை கொண்டு எளிமையாக தயாரிக்கப்படுகிறது. மற்ற ஆசிய நாடுகளைப் போலவே, அரிசி கஞ்சி உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு உணவாகக் வழங்கப்படுகிறது. [ மேற்கோள் தேவை ]

சீனா

தொகு

கஞ்சி சீனாவின் குவாங்டாங் பகுதியில் ஒரு பிரதான காலை உணவாகும். மத்திய மற்றும் வடக்கு சீனாவில் "பைசூ" என்று அழைக்கப்படுகிறது.[5] சீன கஞ்சி பிராந்தியத்தின் அடிப்படையில் கணிசமாக வேறுபடுகிறது. உதாரணமாக, கான்டோனீஸ் என்ற கஞ்சி தயாரிக்க, உடைந்த வெள்ளை அரிசி மிகவும் அடர்த்தியான, வெள்ளை கஞ்சியாக மாறும் வரை அதன் எடையைப் போல பல மடங்கு தண்ணீரில் வேகவைக்கப்படுகிறது. பிற பிராந்தியங்களில் தயாரிக்கப்படும் கஞ்சிகள் வெவ்வேறு வகையான அரிசியை வெவ்வேறு அளவு தண்ணீருடன் பயன்படுத்தி வெவ்வேறு நிலைத்தன்மையான கஞ்சிகள் தயாரிக்கப்படுகிறது. புளிப்புக்கான பல நாட்டுப்புற மரபுத்தொடர்கள் இந்த உணவில் இருந்து பெறப்படுகின்றன.[6][7][8][9][10][11]

இந்தியா

தொகு

தமிழ்நாட்டில், ஒரு வெற்று அரிசி கஞ்சி, அல்லது அதிகமாக சமைத்த அரிசியில் இருந்து அடர்த்தியான வடிக்கப்பட்ட நீர் கஞ்சி என்று அழைக்கப்படுகிறது. கஞ்சி தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் வெவ்வேறு தானியங்களைக் கொண்டு எடுத்துக்காட்டாக சிறு தினை அல்லது முத்து தினை,[12][13] விரல் தினை,[14] உடைந்த கோதுமை, மக்காச்சோளம் போன்றவைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கேரள மக்கள் அரிசியில் தயாரிக்கும் நீர் நிறைந்த "கஞ்சியை பச்சைப் பயறு அல்லது துவையலுடன் உண்கிறார்கள். கஞ்சி அரிசி அல்லது கேழ்வரகைக் (ராகி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. பூண்டுக் கஞ்சி, பொட்டுக்கடலை கஞ்சி , ஜவ்வரிசிக் கஞ்சி, வெந்தயக் கஞ்சி என பல வகைகளிலும் தயாரிக்கப்படுகிறது[15] பொருளாதார நிலை அல்லது சுகாதாரத் தேவைகளைப் பொறுத்து கஞ்சியில் கொட்டைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அரிசி அதிக அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து அரிசி கஞ்சி தயாரிக்கப்படுகிறது. இந்த தயாரிப்பில், பால் மற்றும் சர்க்கரை (பொதுவாக வெல்லம்) அல்லது தயிர் மற்றும் உப்பு சேர்க்கப்படுகின்றன. கேழ்வரகு கஞ்சி என்பது உலர்ந்த கேழ்வரகினை நீரில் நனைத்து நிழலில் வைத்து முளைகள் கட்டிய பின்னர், அதை மென்மையான தூளாக்கி அந்தத் தூளினை தண்ணீரில் சேர்த்து சமைக்கப்படுகிறது. இந்த தயாரிப்பில் பால் மற்றும் பழுப்பு சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. ராகி கஞ்சியை ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மற்றொரு கஞ்சி தயாரிப்பில் (ஆங்கிலத்தில் - SAGO, இந்தி sabudana) சவ்வரிசி பயன்படுத்தப் படுகிறது சாகோ கஞ்சி உலர்ந்த வறுத்த மற்றும் சர்க்கரையுடனோ அல்லது சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. சாகோ சமைக்கும் வரை தண்ணீரில் வேகவைக்கப்படுகிறது. மூன்று வயது குழந்தைகள் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் இதை சாப்பிடுகிறார்கள்.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rice congee – SpeedyLook encyclopedia". Myetymology.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-24.
  2. congeal congelation. "congee". En.academic.ru. பார்க்கப்பட்ட நாள் 2012-11-24.
  3. "Coozh porrdige mentioned in Sangam literature". knowyourheritage. பார்க்கப்பட்ட நாள் 2017-06-07.
  4. Robert Saunders (1789) "Boutan & Thibet", Philosophical Transactions of the Royal Society Vol. 79, p. 101
  5. (家政), 陳春香 (1 April 2006). Congee - Special Porridge (Chinese Edition). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9868213630.
  6. 赵喜荣 (2023-06-05). "东拉西扯唠酸粥(二)". 府谷故事 (府谷县委史志研究室) இம் மூலத்தில் இருந்து 2023-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230827155049/https://mp.weixin.qq.com/s/CPt_a6nVmkcAHRL2V7fA9Q. 
  7. 若希 (2022-11-29). "可口的烂腌菜". 鄂尔多斯日报: p. 6 இம் மூலத்தில் இருந்து 2023-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230825100032/http://www.ordosnews.com/wenlv/2022-11/29/content_430080.html. 
  8. 杜洪涛 (2022-11-07). "准格尔的酸味". 內蒙古日報 இம் மூலத்தில் இருந்து 2023-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230821043108/http://szb.northnews.cn/nmgrb/resfile/2022-11-07/06/nmgrb2022110706.pdf. 
  9. 魏二保; 王二永 (2018-01-18). "府谷酸捞饭、酸稀粥、酸米汤,只属于我们府谷人的味道". 府谷报 (府谷县融媒体中心). https://mp.weixin.qq.com/s?__biz=MjM5ODc0OTA4MQ==&mid=2649782513&idx=3&sn=62146bdf3835f6889ccd8a905ac4684b. 
  10. 闫桂兰 (2019-01-13). "准格尔的酸粥!口水直流". 右读. https://www.thepaper.cn/newsDetail_forward_2853841. 
  11. 邢向东; 王兆富 (2014). 吴堡方言调查研究. 中华书局. pp. 43, 44, 48, 51, 61, 150.
  12. Reporter, Staff (2012-08-19). "NATIONAL / TAMIL NADU : Minister moots heritage tourism plan for Jawadu Hills". 
  13. Shonali Muthalaly (2010-06-11). "Life & Style / Food : The Reluctant Gourmet – Back to the basics". The Hindu. Archived from the original on 2012-07-19. பார்க்கப்பட்ட நாள் 2012-11-24.
  14. Syed Muthahar Saqaf (2012-04-08). "NATIONAL / TAMIL NADU : Desi version of porridge sold like hot cakes". 
  15. தினத்தந்தி குடும்பமலர் 22.4.2018- சுவையான கஞ்சி வகைகள்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=கஞ்சி&oldid=4198597" இலிருந்து மீள்விக்கப்பட்டது