ஓ. எஸ். மணியன்
ஓ. எஸ். மணியன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், ஓரடியம்புலம் கிராமத்தினை சேர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் சோமுத்தேவர், தாயார் பெயர் காசாம்பு அம்மாள் ஆவார்.[2]
ஓ. எஸ். மணியன் | |
---|---|
பிறப்பு | 29 ஏப்ரல் 1954[1] ஓரடியம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு[1] |
இருப்பிடம் | நாகப்பட்டினம் & புது தில்லி, இந்தியா[1] |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | காதர் மொகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம், தமிழ்நாடு[1] |
பணி | அரசியல்வாதி, விவசாயி |
செயற்பாட்டுக் காலம் | 1995 - முதல் |
சொந்த ஊர் | ஓரடியம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[1] |
பெற்றோர் | சோமுத்தேவர் (தந்தை) & காசாம்பு அம்மாள் (தாய்)[1] |
வாழ்க்கைத் துணை | கலைச்செல்வி [1] |
பிள்ளைகள் | 02 |
இளமைக் காலம்
தொகுஇவர் இளமைக் காலம் முதலே அரசியல் ஆர்வமும், பொதுநலத்தில் ஆர்வமும் உடையவர். தனது 18 வயது முதலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பிறகு ஒன்றியச் செயலாளர்,கழக கொள்கைப் பரப்புச் செயலாளர், மாவட்டக் கழகச் செயலாளர், என பல கட்சிப் பொறுப்புகளில் வகித்துள்ளார்.
இவர் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக வகித்த காலம் தலைமை கழக பேச்சாளர்களின் பொற்காலம் என இன்றளவும் தலைமை கழக பேச்சாளர்களால் போற்றப்படுகிறது.
குடும்பம்
தொகுஇவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.[2]
அரசியல்
தொகுஇவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சார்ந்த அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து உள்ளார். வேதாரண்யம் தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
கல்வி
தொகுதிரு ஓ எஸ் மணியன் அவர்கள் இளங்கலை சட்டம் பயின்றுள்ளார்.
வகித்த பதவிகள்
தொகு# | தொடக்கம் | வரை | பதவி |
---|---|---|---|
1 | 1995 | 2001 | உறுப்பினர், ராஜ்ய சபா |
2 | 2009 | 2014 | உறுப்பினர், 15வது மக்களவை |
3 | 31 ஆகத்து 2009 | 30 ஏப்ரல் 2014 | உறுப்பினர், வர்த்தகக் குழ |
4 | 31 ஆகத்து 2009 | 30 ஏப்ரல் 2014 | உறுப்பினர், மின்சாரக் குழு |
5 | 23 செப்டம்பர் 2009 | 30 ஏப்ரல் 2014 | உறுப்பினர், சட்டக் குழு |
6 | 2016 | 23 மே 2016– தற்போது | உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் |
7 | 2016 | 23 மே 2016–தற்போது | அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை |
8 | 2021 | உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Biography". Lok Sabha Website இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201160314/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4550.
- ↑ 2.0 2.1 "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 31 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2016.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.