ஒற்றை, இரட்டை வரிசைமாற்றங்கள்
கணிதத்தில், வரிசைமாற்றங்கள் ஒற்றைப்படை வரிசைமாற்றங்கள், (Odd permutations) இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் (Even permutations) என இருவகைப்படும்.ஒவ்வொரு வரிசைமாற்றமும் அது எத்தனை இடமாற்றங்களின் சேர்வையாக இருக்கிறது என்பதைப் பொருத்து அது ஒற்றைப்படையாகவோ இரட்டைப்படையாகவோ வகைப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக
மூன்று இடமாற்றங்களின் சேர்வை[1][2][3]
இதனால் இது ஒரு ஒற்றைப்படை வரிசைமாற்றம்.
மாறாக,
இரண்டு இடமாற்றங்களின் சேர்வை
இதனால் இது ஒரு இரட்டைப்படை வரிசைமாற்றம்.
வரிசைமாற்றத்தின் குறி
தொகுஒரு வரிசைமாற்றம் -இன் குறி (Sign, Signature)என்பது +1 ஆகவோ -1 ஆகவோ வரையறுக்கப்படும். ஒற்றைப்படை வரிசைமாற்றமயிருந்தால் அதன் குறி -1. இரட்டைப்படையாயிருந்தால், +1. இதற்குக் குறியீடு: அல்லது
தேற்றம்: சமச்சீர்குலம் க்கும் 2-ஆவது கிரம சுழற்குலம் க்கும் இடையில் என்ற மேற்சொன்ன கோப்பு, ஒரு காப்பமைவியம் (homomorphism).
மாறிசைக்குலம்
தொகுஇதனால் இக்காப்பமைவியத்தின் உட்கரு (kernel) இன் உட்குலமாகும். இந்த உட்குலத்திற்கு பொருள்களின் மாறிசைக்குலம் (Alternating Group on n objects) எனப் பெயர். இதற்குக் குறியீடு: . இதனுடைய கிரமம்: இவ்வுட்குலத்தில் இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் மட்டுமே உள்ளன; -கிரம இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் எல்லாம் இதனில் அடக்கம்.
எடுத்துக்காட்டு
தொகுஇல் 24 உறுப்புகள் உள்ளன. இன் 12 உறுப்புகள் (அ-து, 4-கிரம இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் எல்லாம்) பின்வருமாறு:
- ;
- .
விளைவுகள்
தொகு- இரட்டைப்படை நீளமுள்ள சுழல் ஓர் ஒற்றைப்படை வரிசைமாற்றம்.
- ஒற்றைப்படை நீளமுள்ள சுழல் ஓர் இரட்டைப்படை வரிசைமாற்றம்.
- ஒரு வரிசைமாற்றம் அதனுடைய வெட்டில்லாத சுழல் வடிவத்தில் இரட்டைப்படை நீளமுள்ள சுழல்கள் ஓர் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருந்தால், இருந்தால்தான், அது ஒற்றைப்படை வரிசைமாற்றமாக இருக்கும்.
எ.கா.:
இதனில் 2 இரட்டைப்படை நீளமுள்ள சுழல்கள் இருப்பதால், ஓர் இரட்டைப்படை வரிசைமாற்றம்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rotman (1995), p. 9, Theorem 1.6.
- ↑ Jacobson (2009), p. 51.
- ↑ Goodman, p. 116, definition 2.4.21