ஒரு கை ஓசை (தொலைக்காட்சி தொடர்)
ஒரு கை ஓசை என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 20 சனவரி 2014 முதல் 30 சனவரி 2015 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 260 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்பப் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
ஒரு கை ஓசை | |
---|---|
![]() | |
வகை | |
எழுத்து | நிர்வானா கதை குழு |
திரைக்கதை | குரு சம்பந் குமார் |
இயக்கம் | என்.பிரியன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 260 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஒளிப்பதிவு | மா பொ.ஆனந்த் |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 20 சனவரி 2014 30 சனவரி 2015 | –
Chronology | |
முன்னர் | டான்ஸ் தமிழா டான்ஸ் |
பின்னர் | லட்சுமி வந்தாச்சு |
இந்த தொடரை என்.பிரியன் என்பவர் இயக்க, சுஜிதா, சாக்சி சிவா, புவனேசுவரி, மகாலட்சுமி, ரிஷி, யோகினி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] இந்தத் தொடருக்கு குரு சம்பந் குமார் வசனம் எழுதி உள்ளார் மற்றும் மா பொ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதை சுருக்கம்
தொகுநடுத்தர குடும்பத்தை சேர்ந்த வசந்தி (சுஜிதா) அவரது கணவன் பாலு (சாக்சி சிவா) மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளான நிகிதா, நவ்யா, நவீன் ஆகியோர் சந்தோசயமாக வாழ்ந்து வருகின்றனர். வசந்தியின் கணவர் பாலு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒருநாள் திடிரேன பாலு காணாமல் போகிறார். கணவனின் பிரிவுக்குப் பின்னால் தனி ஒரு பெண்ணாக நின்று குழந்தைகளை வசந்தி எப்படி வளர்க்கிறாள் அதற்காக அவள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்னென்ன என்பதுதான் இந்த தொடரின் கதை
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஜீ தமிழில் சுஜிதா நடிக்கும் ஒரு கை ஓசை". tamil.filmibeat.com.
வெளி இணைப்புகள்
தொகுஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ஒரு கை ஓசை (20 சனவரி 2014 – 30 சனவரி 2015) |
அடுத்த நிகழ்ச்சி |
டான்ஸ் தமிழா டான்ஸ் (திங்கள் - புதன்) (2013 - 17 ஜனவரி 2014) |
லட்சுமி வந்தாச்சு (2 பிப்ரவரி 2015 - 16 ஜூன் 2017) |