ஒப்புரவு (அருட்சாதனம்)
ஒப்புரவு அல்லது பாவ மன்னிப்பு (Confession ) என்பது கத்தோலிக்க திருச்சபைகளில் வழங்கப்படும் ஏழு அருட்சாதனங்களில் ஒன்று. பாவம் செய்வதால் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஏற்படும் விரிசலை நீக்கும் அருட்சாதனம் பாவமன்னிப்பு அல்லது ஒப்புரவு அருட்சாதனம் என்று அழைக்கப்படுகிறது. கடவுள் சார்பாக வீற்றிருக்கும் பாதிரியாரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அதற்கு அவர் கூறும் பரிகாரங்களை செய்ய வேண்டும். ஒப்புரவு அருட்சாதனம் குணமளிக்கும் அருட்சாதனங்களில் முதலாவது அருட்சாதனம் ஆகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/f/fe/%D0%98%D1%81%D0%BF%D0%BE%D0%B2%D0%B5%D0%B4%D1%8C_%D0%B1%D0%B5%D1%80%D0%BD_%D1%81%D0%BE%D0%B1%D0%BE%D1%80.jpg/220px-%D0%98%D1%81%D0%BF%D0%BE%D0%B2%D0%B5%D0%B4%D1%8C_%D0%B1%D0%B5%D1%80%D0%BD_%D1%81%D0%BE%D0%B1%D0%BE%D1%80.jpg)
செய்யும் முறை
தொகு- செய்த பாவங்களை நினைத்து பார்த்து மனம் வருந்துதல்
- இனிமேல் இது போன்ற பாவங்களை செய்வதில்லை என உறுதி எடுத்தல்
- குருவிடம் பாவங்களை அறிக்கையிடல்
- குருதரும் பரிகாரங்களை செய்தல்
உசாத்துணைகள்
தொகுபாவ சங்கீர்த்தனம் செய்யும் முறை
பாவ சங்கீர்த்தனம் பரணிடப்பட்டது 2015-04-17 at the வந்தவழி இயந்திரம்