ஒட்டாவாவில் ஈழத்தமிழரின் எதிர்ப்புப் போராட்டம், ஏப்ரல் 2009
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில், பாராளுமன்றம் முன்னர் ஈழத்தமிழர்கள் ஏப்ரல் மாதத் தொடக்கம் முதல் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐந்து பேர் கனடா பாராளுமன்றம் முன்னர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/d/d3/Ottawa_Tamil_Protest_1.jpg)
மாணவர்களின் பங்களிப்பு
தொகுபின்புலம்
தொகுவன்னியில் இலங்கைப் படைத்துறை மேற்கொண்டுவரும் படையெடுப்பில் மூவாயிரம் வரையானோர் இறந்து, பல்லாயிரக்கணக்காணோர் காயமடைந்து, ஏறக்குறைய அனைவரும் அகதிகளாகி உள்ளனர். ஏப்ரல் 5 இல் இலங்கைப் படைத்துறை புதுக்குடியிருப்பை கைப்பற்றி இருப்பதாக அறிவித்தனர். சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொது மக்களும், பல்லாயிரக்கணக்காண போராளிகளும் சுமார் 20 சதுர கிமீ பரப்பளவில் சிக்கி உள்ளனர்.