எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம்
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் எலச்சிபாளையத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,565 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 22,887 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 66 ஆக உள்ளது. [1]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஎலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2] உஞ்சனை • தொண்டிபட்டி • சக்திநாய்க்கன்பாளையம் • புத்தூர் கிழக்கு • புஞ்சைபுதுப்பாளையம் • புள்ளாகவுண்டம்பட்டி • போக்கம்பாளையம் • பெரியமணலி • நல்லிபாளையம் • முசிறி • மோளிபள்ளி • மாவுரெட்டிபட்டி • மருக்காலம்பட்டி • மண்டகபாளையம் • மானத்தி • லத்துவாடி • குப்பாண்டபாளையம் • கூத்தம்பூண்டி • கொன்னையார் • கோக்கலை • கிளாப்பாளையம் • இலுப்புலி • இளநகர் • சின்னமணலி • பொம்மம்பட்டி • அக்கலாம்பட்டி • அகரம் • 87 கவுண்டம்பாளையம் • 85 கவுண்டம்பாளையம்
வெளி இணைப்புகள்
தொகு- நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்