எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம்


எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Ernakulam Junction) இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பெரிய தொடர்வண்டி நிலையம் ஆகும். இதை எர்ணாகுளம் தெற்கு தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பர். இந்நிலையத்தின் குறியீடு இ.ஆர்.எசு ஆகும்.[1]) திருவனந்தபுரம் இரயில்வே பிரிவில் உள்ள புறநகர் அல்லாத தரம் 2 நிலையங்கள் என்ற வகைப்பாட்டில் எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம் இடம்பெறுகிறது. [2] இது கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள முக்கிய இரயில் முனையமாகும். ஒரே நேரத்தில் 376 இரயில் பாதைகளைக் கட்டுப்படுத்தும் இந்நிலையம் தென்னிந்தியாவின் பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றாகும்.[3] 2018–19 ஆம் காலத்தைய நிதியாண்டில் ₹158 கோடியும் 2023 ஆம் ஆண்டில் ₹196 கோடியும் ஈட்டி கேரளாவில் பயணிகள் வருவாயில் இரண்டாவது பெரியதாகவும், தெற்கு இரயில்வேயில் ஐந்தாவது பெரியதாகவும் இந்நிலையம் திகழ்கிறது.[4] எர்ணாகுளம் சந்திப்பு என்பது இந்திய இரயில்வேயின் தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும் புறநகர் அல்லாத தரம் -2 என வகைப்படுத்தப்பட்ட நிலையமாகும். திருவனந்தபுரம் இரயில்வே பிரிவின் கீழ் வருகிறது.[5] இது இந்தியாவின் முதல் முழுமையாக ஊனமுற்றோர் நட்பு இரயில் நிலையமாகும்.[6]

எர்ணாகுளம் சந்திப்பு சந்திப்பு தொடருந்து நிலையம்
எறணாகுளம் தெற்கு
Ernakulam Junction
എറണാകുളം സൌത്ത്
இந்திய இரயில்வே
பொது தகவல்கள்
அமைவிடம்கொச்சி, கேரளம், இந்தியா
ஆள்கூறுகள்9°58′08″N 76°17′30″E / 9.96885°N 76.29160°E / 9.96885; 76.29160
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்எறணாகுளம் - கோட்டயம் - காயங்குளச் சந்திப்பு,

ஷொர்ணூர் சந்திப்பு - கொச்சி துறைமுக முனையம், எறணாகுளம் - ஆலப்புழை - காயங்குளச் சந்திப்பு, எறணாகுளம் - ஷொர்ணூர் - கண்ணூர், எறணாகுளம் - ஷொர்ணூர் - போதனூர்,

எறணாகுளம் - ஷொர்ணூர் - நிலம்பூர்
நடைமேடை6
இருப்புப் பாதைகள்8
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுERS
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1932
மறுநிர்மாணம்1946
மின்சாரமயம்உண்டு

தொடர்வண்டிகள்

தொகு

எர்ணாகுளச் சந்திப்பிலிருந்து கிளம்பும் வண்டிகள்:

எண் வண்டி எண் கிளம்பும் இடம் சேரும் இடம் வண்டியின் பெயர்
1. 12224/12223 எர்ணாகுளம் சந்திப்பு லோகமான்ய திலக் முனையம் மும்பை துரந்தோ விரைவுவண்டி
2. 12283/12284 எர்ணாகுளம் சந்திப்பு ஹசரத் நிசாமுதீன் புது தில்லி துரந்தோ விரைவுவண்டி
3. 12617/12618 எர்ணாகுளம் சந்திப்பு ஹசரத் நிசாமுதீன் மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி
4. 12645/12646 எர்ணாகுளம் சந்திப்பு ஹசரத் நிசாமுதீன் மில்லினியம் விரைவுவண்டி
5. 16865/16866 எர்ணாகுளம் சந்திப்பு காரைக்கால் டீ கார்டன் விரைவுவண்டி
6. 16305/16306 எர்ணாகுளம் சந்திப்பு கண்ணூர் எறணாகுளம் - கண்ணூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
7. 16307/16308 எர்ணாகுளம் சந்திப்பு கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ்
8. 12678/12677 எர்ணாகுளம் சந்திப்பு பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
9. 12683/12684 எர்ணாகுளம் சந்திப்பு பெங்களூர் அதிவிரைவுவண்டி
10. 22607/22608 எர்ணாகுளம் சந்திப்பு பெங்களூர் அதிவிரைவுவண்டி
11. 16303/16304 எர்ணாகுளம் சந்திப்பு திருவனந்தபுரம் சென்ட்ரல் வஞ்சிநாடு விரைவுவண்டி
12. 10216/10215 எர்ணாகுளம் சந்திப்பு மார்கோவா மட்காவ் விரைவுவண்டி
13. 16309/16310 எர்ணாகுளம் சந்திப்பு பட்னா பட்னா விரைவுவண்டி
14. 16359/16360 எர்ணாகுளம் சந்திப்பு பட்னா பட்னா விரைவுவண்டி
15. 16337/16338 எர்ணாகுளம் சந்திப்பு ஓக்கா ஓக்கா விரைவுவண்டி
16. 12522/12521 எர்ணாகுளம் சந்திப்பு பரவுனி ரப்திசாகர் விரைவுவண்டி
17. 11098/11097 எர்ணாகுளம் சந்திப்பு புனே பூர்ணா விரைவுவண்டி
18. 12519/12520 எர்ணாகுளம் சந்திப்பு புனே புனே விரைவுவண்டி
19. 12977/12978 எர்ணாகுளம் சந்திப்பு அஜ்மீர் மருசாகர் விரைவுவண்டி
20. 22816/22817 எர்ணாகுளம் சந்திப்பு பிலாஸ்பூர் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Station Code Index" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 2023–24. p. 6. Archived from the original (PDF) on 16 February 2024. பார்க்கப்பட்ட நாள் 25 March 2024.
  2. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 1. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 25 March 2024.
  3. "Ernakulam Junction: Restrictions on train traffic from Jan 30". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/kochi/Ernakulam-Junction-Restrictions-on-train-traffic-from-Jan-30/articleshow/50712992.cms. 
  4. "Kerala railway stations ahead in passenger fare income". Malayala Manorama (Thrissur). 1 January 2016 இம் மூலத்தில் இருந்து 3 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160103063307/http://english.manoramaonline.com/news/kerala/kerala-railway-stations-ahead-in-passenger-fare-income.html. 
  5. "Annual Originating Passengers & Earnings for the year 2022-23" (PDF). Indian Railways. Archived (PDF) from the original on 24 November 2023. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  6. "Ernakulam Is India's 1st Disabled-Friendly Railway Station, Thanks To This Resilient Woman". India Times. https://www.indiatimes.com/news/india/ernakulam-is-india-s-1st-disabled-friendly-railway-station-thanks-to-this-resilient-woman-337375.html.