எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1] சேந்தமங்கலம் வட்டத்தில் உள்ள எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் எருமைப்பட்டியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,570 பேர் ஆவர். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 27,054 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 435 பேர் ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஎருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
வராகூர் • வரதராஜபுரம் • வாழவந்தி • வடவாத்தூர் • திப்ரமாதேவி • சிவாநாய்க்கன்பட்டி • செவிந்திபட்டி • ரெட்டிபட்டி • புதுக்கோட்டை • பொட்டிரெட்டிபட்டி • பெருமாபட்டி • பவித்ரம் புதூர் • பவித்ரம் • பழையபாளையம் • முட்டன்செட்டி • முத்துகாபட்டி • மேட்டுபட்டி • கோணங்கிபட்டி • கொடிக்கால்புதூர் • காவக்காரன்பட்டி • தேவராயபுரம் • பொம்மசமுத்ரம் • போடிநாய்க்கன்பட்டி • அழங்காநத்தம்
வெளி இணைப்புகள்
தொகு- நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்