எம். துரை
இந்திய அரசியல்வாதி
எம். துரை என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக வந்தவாசி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]