உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு என்பது 2023 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் தமிழ் வளர்ச்சிக்கான மாநாடாகும். சென்னை வளர்ச்சிக் கழகத்தின் பன்னாட்டுத் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் ஒவ்வொரு ஆண்டு ஒரு கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த மாநாட்டினை நடத்துகிறது. இம்மாநாட்டில் தமிழ்மொழியின் வளர்ச்சி நிலைகளை மதிப்பீடு செய்யும் வகையில் இயல்-இசை-நாடகத் தமிழ், அறிவியல் தமிழ், சட்டத் தமிழ், மருத்துவத் தமிழ், ஊடகத் தமிழ் முதலான பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்படுகின்றன.[1] மேலும், தமிழறிஞர்களுக்கு வளர்தமிழ் அறிஞர் விருதும் வளர்தமிழ் மாமணி விருதும் வழங்கப்படுகிறது.
முதலாம் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
தொகு2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னையில் நடைபெற்றது.[2]
இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
தொகு2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12, 13 ஆகிய நாட்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்துடன் இணைந்து சென்னையில் நடைபெறுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னையில் ஆக.12, 13 தேதிகளில் உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு: 6 தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1291088-world-tamil-language-development-and-research-conference-on-august-12-and-13-in-chennai.html. பார்த்த நாள்: 10 August 2024.
- ↑ "முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சி". தினத்தந்தி. https://www.youtube.com/watch?v=_oA1D0YiTmI. பார்த்த நாள்: 10 August 2024.
- ↑ "ஆகஸ்ட் 12, 13ஆம் தேதிகளில் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி, ஆய்வு மாநாடு". தமிழ் முரசு. https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20240807-4441222. பார்த்த நாள்: 10 August 2024.