உருவிலா ஒளிப்படவியல்
சில நேரங்களில் புறநிலை அல்லாத, சோதனை அல்லது கருத்தியல் ஒளிப்படம் என்றும், சுருக்க புகைப்படம் என்றும் வழமையில் உள்ள, உருவிலா ஒளிப்படவியல் (Abstract photography) என்பது, ஒரு பொருள் உலகத்துடன் உடனடி தொடர்பு இல்லாத மற்றும் ஒளிப்பட உபகரணங்கள், செயல்முறைகள் அல்லது பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு காட்சிப் படத்தை சித்தரிக்கும் ஒரு வழிமுறையாகும்.[1] ஒரு உருவிலா ஒளிப்படத்தில், பார்வையாளரிடமிருந்து அதன் உள்ளார்ந்த சூழலை நீக்க ஒரு இயற்கை காட்சியின் ஒரு பகுதியை தனிமைப்படுத்தலாம், உண்மையான பொருட்களிலிருந்து உண்மையற்ற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்றே பண்பியலாக அரங்கேற்றப்படலாம், ஒரு உணர்வு, அல்லது தோற்றத்தை வெளிப்படுத்த நிறம், ஒளி, நிழல், இழையமைப்பு, படிவம் அல்லது வடிவத்தைப் பயன்படுத்தலாம்.[2] பண்பியல் கொண்ட இந்த ஒளிப்படவியலை, ஒளிப்படக்கருவி, நிழற்படத்துக்குரிய இருட்டறை அல்லது கணினி போன்ற பாரம்பரிய புகைப்பட உபகரணங்களைப் பயன்படுத்தி உருவாக்கலாம் அல்லது படச்சுருள், காகிதம் அல்லது எண்ணியல் விளக்கக்காட்சிகள் உட்பட பிற ஒளிப்பட ஊடகங்களை நேரடியாகக் கையாளுவதன் மூலமும், ஒளிப்படக்கருவியைப் பயன்படுத்தாமலும் உருவாக்கலாம்.[3]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/d2/Abstract_photography_%D8%B9%DA%A9%D8%A7%D8%B3%DB%8C_%D8%A7%D9%86%D8%AA%D8%B2%D8%A7%D8%B9%DB%8C_14.jpg/220px-Abstract_photography_%D8%B9%DA%A9%D8%A7%D8%B3%DB%8C_%D8%A7%D9%86%D8%AA%D8%B2%D8%A7%D8%B9%DB%8C_14.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/e7/Coloured_reflections_2_%283796445408%29.jpg/220px-Coloured_reflections_2_%283796445408%29.jpg)
உருவிலா ஒளிப்படவியலை வரையறுத்தல்
தொகுஉருவிலா ஒளிப்படவியல் எடுத்தல் என்ற சொல்லுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வரையறை எதுவும் இல்லை. இந்த விடயத்தில் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளில், ஆரோன் சிசுகைண்டின் என்பவர் வண்ணப்பூச்சுகளை தோலுரித்தல் மூலம் புகைப்படங்கள் போன்ற ஒரு சுருக்கமான விடயத்தின் முழுமையான பிரதிநிதித்துவப் படம் முதல், மார்கோ புரூயரின் புனையப்பட்ட அச்சுகள் மற்றும் புத்தகங்கள் போன்ற புகைப்படக்கருவி அல்லது படம் இல்லாமல் உருவாக்கப்பட்ட முற்றிலும் பிரதிநிதித்துவமற்ற படங்கள் வரை அனைத்தும் இதில் அடங்குகிறது. இந்தச் சொல் பரந்த அளவிலான காட்சிப் பிரதிநிதித்துவங்களை உள்ளடக்கியது மற்றும் அதன் இயல்பிலேயே ஐயத்துக்கிடமின்றி தெளிவற்றதாக இருக்கும் ஒரு வகை புகைப்படத்தை வகைப்படுத்துவதில் வெளிப்படையானது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Abstract Photography". Style Guide. stevewaitephotography - Powered by Adobe Portfolio.
- ↑ "presis - Abstract Photography". Style Guide. www.creativehut.org.
- ↑ "Club Subject Definitions". Style Guide. apja.org.au.
- ↑ "'Abstract Photography'" (PDF). Style Guide. toowoomba.myphotoclub.