உபபாண்டவர்கள்
உபபாண்டவர்கள் (Upapandavas) இந்து காவியமான மகாபாரதத்தில் தோன்றும் பாண்டவர் ஐவருக்கும் திரௌபதிக்கும் பிறந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். இவர்களில் பிரதிவிந்தியன் யுதிர்ஷ்டிரனுக்கும், சுதசோமன் வீமனுக்கும், சுருதகீர்த்தி அர்ச்சுனனுக்கும், சதாநீகன் நகுலனுக்கும், சுருதகர்மன் சகாதேவனுக்கும் மகனாய்ப் பிறந்தவர்கள்.[1] இவர்கள் ஐவருக்கும் திரௌபதியே தாயாவாள்.
வீடுமர் இவர்களை மகாரதர்கள் எனக் குறிப்பிடுகிறார். இவர்கள் பாண்டவர்களுடன் சேர்ந்து [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போரில் ஈடுபட்டனர். மேலும் பல எதிரிப் போர்வீரர்களைக் கொன்றார்கள். இவர்கள் தங்கள் தந்தையர்களைப் போலவே கொடூரமானவர்களாக இருந்தனர். இதைத் தவிர, இச்சகோதரர்களைப் பற்றி மகாபாரதத்தில் அதிகம் கூறப்படவில்லை. இவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருந்தனர். இவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சில கௌரவ வீரர்களால் மட்டுமே தோற்கடிக்கப்பட்டனர்.[2]
குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் இரவில் துரோணரின் மகன் அசுவத்தாமன் இவர்கள் ஐவரையும் கொன்றுவிட்டான்.
இவர்களுக்கு தந்தைவழியில் பல ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் அபிமன்யு, கடோற்கஜன் மற்றும் அரவான் ஆகியோரும் போரில் ஈடுபட்டனர். இந்த சகோதரர்களில் 8 பேரும் போரில் உயிரிழந்தனர். உபபாண்டவர்கள், அபிமன்யுவுடன் சேர்ந்து, அரக்க மன்னன் ஆலம்புசனுடனும் சண்டையிட்டனர்.
பிரதிவிந்தியன்
தொகுபிரதிவிந்தியன் (சூரியனைப் போல பிரகாசிப்பவன்)[3] அல்லது சுருதவிந்தியன் யுதிஷ்டிரன் மற்றும் திரௌபதியின் மகனும் உபபாண்டவர்களில் மூத்தவனுமாவான். இவன் ஒரு திறமையான போராளி என்றும், இந்திரனைப் போல துருப்புக்களை எதிர்கொள்வதில் வல்லவன் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.[4] குருசேத்திரப் போரில், பிரதிவிந்தியன் சகுனியுடன் போரிட்டான்.[5] 9வது நாளில், பிரதிவிந்தியன் ஆலம்புசனை மயக்கமடையச் செய்தான். தைரியத்துடன் போராடி தனது தந்தை யுதிஷ்டிரனை துரோணரிடமிருந்து மீட்டான்.
12ஆம் நாள், யுதிஷ்டிரனை உயிருடன் பிடிக்க முயன்ற துரோணரை இவன் விரட்டினான்.
14ஆம் நாள் அபிமன்யுவைக் கொன்ற துச்சாதனனின் மகன் தும்ராசனைக் கொன்று பழிவாங்கினான். 14ஆம் நாள் இரவு, சுதசோமனுடன் சேர்ந்து கௌரவர்கள் சிலருடன் சண்டையிட்டான். 15வது நாளில், அசுவத்தாமனுடன் போரிடிட்டவர்களை நீண்ட நேரம் தடுத்து நிறுத்தினான். ஆனால் இறுதியில் திரௌனியால் முறியடிக்கப்பட்ட பின்னர் போரில் இருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. பின்னர்,16ஆம் நாளில் அபிசாரனின் மன்னர் சித்ரனைக் கொன்றான்.[6]
சுதசோமன்
தொகுசுதசோமன் (சோம பானத்தைப் பிரித்தவன் அல்லது சந்திரனைப் போன்றவன்)[7] வீமன் மற்றும் திரௌபதியின் மகனும், உபபண்டவர்களில் இரண்டாவதும் ஆவான். இவன் மகாபாரதப் போரில் வீரத்துடன் போரிட்டான். மேலும், கதை மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் சிறந்து விளங்கினான். போரின் முதல் நாளில் கௌரவ இளவரசன் விகர்ணனுடன் போரிட்டான். சகுனியை கொன்றதன் மூலம் போரில் இவனும் முக்கிய பங்கு வகித்தான். 14ஆம் நாள் இரவு தனது ஒன்றுவிட்ட சகோதரர் பிரதிவிந்தியனுடன் சேர்ந்து கௌரவர்கள் சிலருடன் போரிட்டான்.[8] 15ஆம் நாளில் துச்சாதனனையும் மற்றும் பிற கௌரவர்களையும் தடுத்து நிறுத்துவதில் இவன் முக்கிய பங்கு வகித்தான்.[9]
சதாநீகன்
தொகுசதாநீகன் ( நூறு படைகளைக் கொண்டவன்) நகுலன் மற்றும் திரௌபதியின் மகனும் உபபாண்டவர்களில் மூன்றாவது நபரும் ஆவார். தனது தாய்மாமனும் மற்றும் குருவுமான திருட்டத்துயும்னனின் கீழ் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். மேலும் போரில் வியூகம் வகுப்பதில் பொறுப்பாளராக இருந்தான்.[10] உபபாண்டவர்களில் வலிமையானவராக கருதப்பட்ட இவன் கௌரவர்களின் கூட்டாளியான பூதகர்மனின் படைகளை அழித்தான்.[11] சதாநீகன் போரின் 6வது நாளில் கௌரவர இளவரசன் துஷ்கர்ணனை தோற்கடித்தான். ஆனால் 11வது நாளில் கர்ணனின் மகன் விருசசேனனால் தோற்கடிக்கப்பட்டான்.[12] கௌரவப் படைத்தலைவர்கள் ஜெயத்சேனன், சித்ரசேனன் மற்றும் சுருதகர்மன் மற்றும் கலிங்க இளவரசன் ஆகியோரைத் தோற்கடித்து அவர்களைக் கொன்றான். 17ஆம் நாளிலும் சதாநீகன் கௌரவர் படைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தினான்.ref>The Mahabharata: Volume 7. June 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184759440.</ref>
சுருதசேனன்
தொகுசுருதசேனன் (வான் படையின் தளபதி) சகாதேவன் மற்றும் திரௌபதியின் மகனும் உபபாண்டவர்களில் நான்காவதும் ஆவான். தனது தந்தையைப் போலவே புத்திசாலியாக இருந்தான். மகாபாரதப் போரின் போது சகுனியால் தோற்கடிக்கப்பட்டான். போரின் 14 வது நாளில் பூரிசிரவஸ்களின் இளைய சகோதரர் சாலாவைக் கொன்றான்.[13] துஷ்மநரன், துர்முகன் போன்ற மற்ற வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் தோற்கடித்தான். கௌரவப் படைத் தளபதி தேவவிரதனின் மகனையும் இவன் கொன்றான்.[14]
சுருதகர்மன்
தொகுசுருதகர்மண் (நல்ல செயல்களுக்கு பெயர் பெற்றவன்) அருச்சுனனுக்கும் திரௌபதிக்கும் பிறந்தவனும் மற்றும் உபபாண்டவர்களில் இளையவனும் ஆவான்.[15] இவனது குதிரைகள் மீன்கொத்தியின் நிறத்தைக் கொண்டிருக்கும்.[16] இவன் தனது தந்தையைப் போலவே விற்கலையில் திறமையான வீரனாக இருந்தான். போரின் முதல் நாளில் காம்போஜ ஆட்சியாளர் சுதக்சினனைத் தோற்கடித்தான். கௌரவத் தளபதி ஜெயத்சேனனையும் 6வது நாளில் தோற்கடித்தான்.[17] துச்சாதனன் மற்றும் அசுவத்தாமன் ஆகியோருக்கு எதிராக விற்போரில் கடுமையாக போரிட்டான். போரின் 16ஆம் நாளில் அபிசார மன்னன் சித்ரசேனனைக் கொன்றான்.
இறப்பு =
தொகுதுரியோதனனின் இறப்பு மற்றும் கௌரவர்களின் தோல்விக்குப் பிறகு போரின் கடைசி இரவில், அசுவத்தாமன் எஞ்சியிருந்த கௌரவர் வீரர்களான கிருதவர்மன் மற்றும் கிருபாச்சாரியர் ஆகியோரை ஒன்று திரட்டி பாண்டவர் முகாமைத் தாக்கினார். பாண்டவ இராணுவத்தின் திருட்டத்துயும்னனும் பல முக்கிய வீரர்களும் தூங்கிக் கொண்டிருந்தபோது அல்லது அவரை எதிர்த்துப் போராட முயன்றபோது அவர்களைக் கொன்றான்
அசுவத்தாமன், சிகண்டி உட்பட அனைத்து உபபாண்டவர்களையும் பாண்டவர்கள் என நினைத்து கொன்று தன் தந்தையின் இறப்புக்குப் பழி தீர்த்துக் கொண்டான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Menon, Ramesh (2006). The Mahabharata : a modern rendering. New York: iUniverse, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780595401888.
- ↑ van Buitenen, J.A.B., ed. (1981). The Mahābhārata. Translated by van Buitenen (Phoenix ed.). Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226846644.
- ↑ N.V., Thadani. The Mystery of the Mahabharata: Vol.4.
- ↑ "Prativindhya - AncientVoice".
- ↑ Mahabharata Book Six (Volume 1): Bhishma. October 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781479852123.
- ↑ "The Real Mahabharat of Sage Vyasa on Facebook". Facebook. Archived from the original on 2022-04-30.வார்ப்புரு:User-generated source
- ↑ N.V., Thadani. The Mystery of the Mahabharata: Vol.4.
- ↑ "The Mahabharata, Book 7: Drona Parva: Ghatotkacha-badha Parva: Section CLXVIII".
- ↑ Roy, Pratāp Chandra (14 June 2015). The Mahabharata. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781451015799.
- ↑ Parmeshwaranand, Swami (2001). Encyclopaedic dictionary of Purāṇas (1st ed.). New Delhi: Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176252263.
- ↑ Parmeshwaranand, Swami (2001). Encyclopaedic dictionary of Purāṇas (1st ed.). New Delhi: Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176252263.
- ↑ "The Fifth and Sixth Days of the Great Battle [Chapter 6]". 9 January 2015.
- ↑ Parmeshwaranand, Swami (2001). Encyclopaedic dictionary of Purāṇas (1st ed.). New Delhi: Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176252263.,
- ↑ "Shrutakarma, Śrutakarmā: 3 definitions". 21 September 2015.
- ↑ John Dececco, Devdutt Pattanaik (2014). The Man Who Was a Woman and Other Queer Tales from Hindu Lore. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317766308.
- ↑ The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781451018264.
- ↑ "The Fifth and Sixth Days of the Great Battle [Chapter 6]". 9 January 2015.