ஈஷ்வர்தாஸ் ரோஹானி
ஈஷ்வர்தாஸ் ரோஹானி (Ishwardas Rohani) (30 ஜூன் 1946 - 5 நவம்பர் 2013) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 1946 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் பாம்பே மாகாணத்தில் உள்ள கராச்சியில் (இன்றைய சிந்து, பாகிஸ்தான்) பிறந்தார். இவர் ஜபல்பூரில் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்தார். 1998 முதல் 2003 வரை துணை சபாநாயகராக இருந்தார்.
ஈஷ்வர்தாஸ் ரோஹானி | |
---|---|
![]() | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 சூன் 1946 |
இறப்பு | 5 நவம்பர் 2013 (67 வயது) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பணி | அரசியல்வாதி |
புனைப்பெயர் | தாதா |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுரோஹானி 1946 ஆம் ஆண்டில் கராச்சியில் பிறந்தார். ஒரு வருடம் கழித்து பிரிவினையின் போது இவர் தனது குடும்பத்துடன் ஜபல்பூருக்குக் குடிபெயர்ந்தார். இவரது மகன் அசோக் ரோஹானி இந்தியாவின் ஜபல்பூரில் ஒரு செயல்திறன் மிக்க மற்றும் பிரபலமான அரசியல்வாதி ஆவார்.
அரசியல் வாழ்க்கை
தொகுரோஹானி 1965-ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்தார். 1973 ஆம் ஆண்டில் ஜபல்பூர் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அவசரநிலையின் போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
1998ல் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2003 முதல் இறக்கும் வரை சபாநாயகராக பணியாற்றினார். [1]
ஈஷ்வர்தாஸ் ரோஹானி | |
---|---|
துணை சபாநாயகர் | 1998-2003 |
சபாநாயகர் | 2003-2013 |
இறப்பு
தொகுஈஷ்வர்தாஸ் ரோஹானி 5 நவம்பர் 2013 அன்று தனது 67 ஆவது வயதில் மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "MP Assembly Speaker Rohani passes away". The Hindu. 5 November 2013. http://www.thehindu.com/news/national/other-states/mp-assembly-speaker-rohani-passes-away/article5316888.ece?homepage=true. பார்த்த நாள்: 2013-11-05.