ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2025
இக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும்.
இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீரெனவும், தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகலாம். |
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2025 பெப்ரவரி 05 அன்று நடைபெறுகிறது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2023 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ. வெ. கி. ச. இளங்கோவன் உடலக்குறைவால் இறந்ததை அடுத்து மீண்டும் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் இராசீவ் குமார், டெல்லியில் நிருபர்களைச் சந்தித்து டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பெப்ரவரி 05-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
தலைப்புகள் | நாட்கள் |
---|---|
வேட்புமனு தாக்கல் | சனவரி 10 |
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் | சனவரி 17 |
வேட்புமனு பரிசீலனை | சனவரி 18 |
வேட்புமனுவை திரும்பப்பெற இறுதி நாள் | சனவரி 20 |
வாக்குப்பதிவு | பெப்ரவரி 05 |
முடிவு அறிவிப்பு | மார்ச்சு 08 |
போட்டி
தொகுதிமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரசு வென்ற இத்தொகுதியில் இம்முறை திமுக போட்டியிடுகிறது. அதிமுக, தேமுதிக, பாசக ஆகியவை இத்தேர்தலை புறக்கணித்துள்ளன. திமுக தனது வேட்பாளராக வி. சி. சந்திரக்குமாரை அறிவித்துள்ளது.[2][3] இந்த இடைத்தேர்தலில் காங்கிரசு போட்டியிடவில்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.[4] எதிர்கட்சியான அதிமுக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.[5] [6] பாசகவும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. [7] தேமுதிகவும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. [8][9] தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. [10] நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறியது, தை ஒன்று அன்று சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்தது.[11][12] நாம் தமிழர் மாநில் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பின் [13][14]சந்திக்கும் முதல் தேர்தல் இது. இத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.[15]
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ள நிலையில் கருநாடக மாநிலத்தின் பெங்களுருவை சேர்ந்த பத்மாவதியின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சின்னம் வழங்கும் போது இவ்விதியை சுட்டிக்காட்டி சில கட்சி சாரா வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பத்மாவதியின் வேட்புமனு அதிகாரிகளால் விலக்கப்பட்டது [16].[17]
இந்த இடைத்தேர்தலில் 68 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2023 இடைத்தேர்தலை விட குறைவாகும்.[18]
2021இல் பெற்ற வாக்குகள்
தொகுகூட்டணி \ கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு வீதம் |
---|---|---|
திமுக+ (காங்கிரசு) | 67,300 | 44.27 |
அதிமுக + (தமாகா) | 58,396 | 38.41 |
நாம் தமிழர் | 11,629 | 7.65 |
மக்கள் நீதி மய்யம்+ | 10,005 | 6.58 |
அமமுக+ | 1,204 | 0.79 |
2023 இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள்
தொகுகூட்டணி \ கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு வீதம் |
---|---|---|---|
திமுக+ (காங்கிரசு) | ஈ. வே கி. ச. இளங்கோவன் | 110,156 | 64.58 |
அதிமுக | தென்னரசு | 43, 923 | 25.75 |
நாம் தமிழர் | ந. மேனகா | 10,827 | 6.35 |
தேமுதிக | ச. ஆனந்த் | 1,432 | 0.84 |
முடிவு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
- ↑ https://www.vikatan.com/government-and-politics/erode-east-by-election-dmk-candidate-announcement-who-is-this-vc-chandrakumar
- ↑ அன்று கேப்டனின் தளபதி...இன்று ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர்... யார் இந்த வி.சி.சந்திரகுமார்? - ERODE BY ELECTION
- ↑ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – காங்கிரஸ் விலகல்!
- ↑ ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு - அதிமுக புறக்கணிப்பு..!
- ↑ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. புறக்கணிப்பு
- ↑ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பாஜக புறக்கணிப்பு
- ↑ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு
- ↑ 'நெஞ்சம் பதறுகிறது'.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவிப்பு..! - ADMK BOYCOTT ERODE BY ELECTION
- ↑ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை- தவெக அறிவிப்பு
- ↑ ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டி?
- ↑ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!
- ↑ நா.த.க. மாநிலக் கட்சியாக அறிவிப்பு!
- ↑ நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்
- ↑ Erode East ByPoll | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!
- ↑ ஈரோடு கிழக்கு; கர்நாடக பெண் வேட்புமனு ஏற்பால் சர்ச்சை - தேர்தல் நடத்தும் அலுவலர் திடீர் மாற்றம்!
- ↑ https://www.vikatan.com/government-and-politics/governance/erode-east-electoral-officer-abrupt-release-careless-at-work-what-is-the-background
- ↑ [https://tamil.news18.com/tamil-nadu/voting-percentage-down-in-erode-east-by-election-nw-mma-ws-b-1720649.html Erode Bypoll | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: குறைந்த வாக்கு சதவீதம்.. 67.97 விழுக்காடு வாக்குகள் பதிவு!]