இளங்கலை வேளாண்மை

இளநிலை வேளாண்மை[1][2][3][4] (Bachelor of Agriculture) என்பது வேளாண் அறிவியல் துறை பற்றிய கல்விக்காக வழங்கப்படும் இளநிலைக் கல்விப் பட்டம் ஆகும்.

இந்தப் பட்டம் பரவலாக விலங்கு அறிவியல், மண் அறிவியல், விவசாய வணிகம், வேளாண்மை, விவசாயத் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவசாயத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விரிவான ஆய்வை உள்ளடக்கியது. விவசாயக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், விவசாயத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய பரந்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதனை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பெரும்பாலும் விவசாயம், விவசாய மேலாண்மை, ஆராய்ச்சி மற்றும் வேளாண் வணிகம் தொடர்பான தொழில்களைச் செய்கிறார்கள். இந்தப் படிப்பிற்கான காலம், நாடு, நிறுவனங்களின் அடிப்படையில் பரவலாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை இருக்கும்.

இந்தியா

தொகு

இந்தியாவில் வேளாண்மையில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பொதுவாக 4 ஆண்டு படிப்பாகும். வேளாண்மை, வேளாண்மை உயிரித் தொழில்நுட்பம், வேளாண்மை நுண்ணுயிரியல், தோட்டக்கலை, தாவர நோயியல், பூச்சியியல், வேளாண் பொருளாதாரம், விரிவாக்கக் கல்வி, மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம், மண் அறிவியல், உணவு நுண்ணுயிரியல், வேளாண் நுண்ணுயிரியல், தோட்டக்கலை, தாவர நோயியல் போன்ற பாடத்திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

வேளாண்மையில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு இந்திய அரசால் 'தொழில்முறைப்' பட்டமாகக் கருதப்படுகிறது. வேளாண் அலுவலர் போன்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் பதவிக்கு, அடிப்படை கல்வித் தேவை இளநிலை வேளாண் அறிவியலாகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bachelor of Agriculture - The University of Melbourne". University of Melbourne (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-16.
  2. England, University of New (2024-01-16). "Bachelor of Agriculture". University of New England (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-16.
  3. "Bachelor of Agriculture :: Lincoln University". Lincoln University in New Zealand. பார்க்கப்பட்ட நாள் 2024-01-16.
  4. "Bachelor of Agriculture". Ocean University of China. பார்க்கப்பட்ட நாள் 2024-01-16.
  5. [1] பரணிடப்பட்டது 18 சூலை 2009 at the வந்தவழி இயந்திரம் Retrieved 23 June 2009

மேலும் பார்க்கவும்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=இளங்கலை_வேளாண்மை&oldid=4188062" இலிருந்து மீள்விக்கப்பட்டது