இலிபியா லோபோ சர்தேசாய்
இலிபியா "லிப்பி" லோபோ சர்தேசாய் (Libia "Libby" Lobo Sardesai) (பிறப்பு 25 மே 1924) ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும் மற்றும் கோவாவைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆவார். பின்னர் தனது கணவர் வாமன் சர்தேசாயுடன் இணைந்து, 1955 முதல் 1961 வரை போர்த்துகேய இந்தியா முழுவதும் ஒலிபரப்பான வாய்ஸ் ஆஃப் ஃப்ரீடம் (சுதந்திரத்தின் குரல்) என்ற இரகசிய வானொலி நிலையத்தை நடத்தினார்.[1] கோவா விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, கோவா, தாமன் மற்றும் தியூவின் சுற்றுலாத் துறையின் முதல் இயக்குநராக இருந்தார்.[2] இந்திய அரசு இவருக்கு 2025 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.
இலிபியா லோபோ சர்தேசாய் | |
---|---|
2024இல் லோபோ | |
பிறப்பு | இலிபியா லோபோ 25 மே 1924 பர்வோரிம், பார்தேசு வட்டம், போர்த்துகேய இந்தியா |
பணி |
|
அறியப்படுவது | வாய்ஸ் ஆஃப் ஃப்ரீடம்(வானொலி நிலையம்) |
வாழ்க்கைத் துணை | வாமன் சர்தேசாய் (தி. 1964; இற. 1994) |
விருதுகள் | பத்மசிறீ (2025) |
வாழ்க்கையும் தொழிலும்
தொகுஆரம்பகால வாழ்க்கை (1924-1954)
தொகுஇலிபியா லோபோ, "லிப்பி" என்ற புனைப்பெயரால் அறியப்பட்டவர். 1924 மே 25 அன்று போர்த்துகேய இந்தியாவின் பார்தேசு வட்டத்தின் போர்வோரிம் என்ற இடத்தில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.[3][4][5] இவரது குழந்தை பருவத்தில் இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. தனது குழந்தை பருவத்தில் ஓவியர் எஃப். என். சோசாவுடன் நண்பராக இருந்தார். ஒரு மாணவராக, லிப்பி டி. பி. குன்ஹாவின் கோவா இளைஞர் சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.[3] 1948 முதல் 1950 வரை அதன் செயலாளராக இருந்தார்.[6]
இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலிய போர்க் கைதிகள் எழுதிய மறைமுக கடிதங்களைப் படித்து புரிந்துகொண்டு அதனை மொழிபெயர்த்தும், கடிதத்தின் "தணிக்கையாளராகவும்" தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதே சமயத்தில் அம்பேத்கரால் நிறுவப்பட்ட சித்தார்த் கலை, அறிவியல் மற்றும் வர்த்தகக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தனது கல்லூரி நாட்களில் தான் லோபோ கோவா விடுதலை இயக்கத்திற்கு பங்களிக்கத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் எம். என். ராய் என்பவரால் இவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எம். என். ராய் நிசீம் எசெக்கியேல் போன்ற பிற பேராசிரியர்களை இவருக்கு அறிமுகப்படுத்தினார்.[3] பின்னர் லோபோ, மும்பை அனைத்திந்திய வானொலியில் சுருக்கெழுத்தாளராகவும் நூலகராகவும் பணியமர்த்தப்பட்டார். வானொலியில் பணிபுரிந்தபோது இவர் சட்டத்தில் பட்டம் பெற்றார்.[7][8]
சுதந்திரத்தின் குரல் (1955-1961)
தொகு1954-55 இல், கோவாவில் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, கோவாவின் எல்லைகளுக்குள் அமைதியாக நுழைந்த பல சத்தியாகிரகிகளை போர்த்துகீசியர்கள் தாக்கிக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, இந்தியா கோவாவுடனான தனது எல்லைகளை மூடி, பொருளாதார முற்றுகையை விதித்தது. இதனால் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் வர்த்தகம் குறைந்தது. லோபோ, வாமன் சர்தேசாய் மற்றும் மும்பையில் தலைமறைவாக வாழ்ந்து வந்த கோவா சுதந்திர ஆர்வலர் நிக்கோலோ மெனிசஸ் ஆகியோர் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினர். போர்த்துகீசியர்கள் பறிமுதல் செய்த இரண்டு கம்பியிலா வானொலிகளைப் பயன்படுத்தி வானொலி ஒலிப்பரப்பாளரானார். இது வாய்ஸ் ஆஃப் ஃப்ரீடம் வானொலி நிலையமாக மாறியது. இதன் மூலம் லோபோ, சர்தேசாய் மற்றும் மெனிசஸ் ஆகியோர் செய்திகளையும் முக்கியமான தகவல்களையும் கோவா மக்களுக்கு அனுப்புவார்கள்.[9]
இவர்கள் ஆரம்பத்தில் கோவாவிலிருந்து சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள அம்பொலி மலைக்கணவாய்களில் தங்கி, ஒரு மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். மெனெசஸும் அவரது மனைவியும் வெளியேறிய பிறகு, லோபோவும் சர்தேசாயும் கோவாவிலிருந்து சுமார் 50 கிமீ தூரத்திலிருக்கும் கருநாடகாவின் கேசில் ராக் எனும் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர்.[9] போர்த்துகீசியர்களிடமிருந்து ஒளிந்து கொள்ள லோபோ "விமல் நட்கர்னி" என்ற மாற்றுப் பெயரை எடுத்துக் கொண்டார். [1]
கோவா படையெடுப்பிற்கு முந்தைய நாட்களில், லோபோ மற்றும் சர்தேசாய் போன்றவர்கள் இந்தியப் பாதுகாப்புப் படைகளால் தொடர்பு கொள்ளப்பட்டனர். 1961 டிசம்பர் 17 அன்று அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் வே. கி. கிருஷ்ண மேனனின் நேரடி செய்தியை இந்த வானொலி நிலையம் அனுப்பியது. போர்த்துகீசிய தலைமை ஆளுநரை சரணடையுமாறு கேட்டுக்கொண்டது. 19 டிசம்பர் 1961 அன்று கோவாவின் மீதான தாக்குதல் நடத்தி கோவா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து, லோபோவும் சர்தேசாவும் ஒரு வானொலி மற்றும் ஒலிபெருக்கியை இணைத்து இந்திய வான்படை விமானத்தில் ஏறி, கோவாவின் மீது பறந்து துண்டு பிரசுரங்களை வீசி கோவாவின் சுதந்திரத்தை அறிவித்தனர்.[9]
விடுதலைக்குப் பிந்தைய காலம் (1961 முதல்)
தொகுகோவாவின் விடுதலையைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போர்த்துகீசிய துருப்புக்களை திருப்பி அனுப்புவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு உதவுவதற்காக லோபோ வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்தார்.[3]
லோபோவும் சர்தேசாவும் கோவா விடுதலை பெற்ற மூன்றாம் ஆண்டு விழாவான 19 டிசம்பர் 1964 அன்று திருமணம் செய்து கொண்டனர்.[3] கோவா விடுதலை பெற்ற பிறகு கோவா, தாமன் மற்றும் தியூவின் முதல் சுற்றுலாத் துறை இயக்குநராக லோபோ இருந்தார்.[2] கோவாவில் பயிற்சி பெற்ற முதல் பெண் வழக்கறிஞராக இவர் கருதப்படுகிறார். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, பெண்களால் முழுமையாக நடத்தப்படும் மகளிர் கூட்டுறவு வங்கியின் நிறுவனர் மற்றும் அதன் விளம்பரதாரராகவும் இவர் இருந்தார். கோவா, மனையியல் அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் இருந்தார்.[3] 1994 ஆம் ஆண்டில், தனது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து, வேதாந்தா நிறுவனத்தை நிறுவினார்.[1]
விருதுகளும் கௌரவங்களும்
தொகுலோபோவின் வாழ்க்கைக் கதை அகுவாடா கோட்டையின் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1] 2024 ஆம் ஆண்டில் இவரது 100 வது பிறந்தநாளை முன்னிட்டு, எஃப். என். சோசாவின் பேரன் சாலமன் சோசா, பனாஜியிலுள்ள லோபோவின் வீட்டின் எதிரிலிருக்கும் ஒரு கட்டிடத்தின் சுவரில் ஒரு சுவரோவியத்தை வரைந்தார்.[9] 2025 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழகி கௌரவித்தது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "At 100, Libia Lobo's voice still inspires Goans". Goa News in English on Gomantak Times (in ஆங்கிலம்). 2024-05-25. பார்க்கப்பட்ட நாள் 2024-07-05.
- ↑ 2.0 2.1 "Freedom fighter and first tourism director of liberated Goa, Daman & Diu felicitated on 100th birthday". oHeraldo. 26 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-07-06.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Menezes, Vivek (28 Apr 2024). "LIBBY DE LIBERDADE". oHeraldo. பார்க்கப்பட்ட நாள் 2024-07-10.
- ↑ 4.0 4.1 Perez, Rosa Maria (2018-07-02). "Provincializing Goa: Crossing Borders Through Nationalist Women" (in en). InterDISCIPLINARY Journal of Portuguese Diaspora Studies 7: 225–240. பன்னாட்டுத் தர தொடர் எண்:2165-2694. https://journals.library.brocku.ca/index.php/ijpds/article/view/3278.
- ↑ Shirodkar, Pandurang Purushottam (1986). Who's Who of Freedom Fighters, Goa, Daman, and Diu. Vol. 1. Goa Gazetteer Department, Government of the Union Territory of Goa, Daman, and Diu. pp. 303–304.
- ↑ Salgaonkar, Seema P. (2006). Women, Political Power, and the State. Abhijeet Publications. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-88683-95-6.
- ↑ Singh Chadha, Pavneet (2024-05-18). "As a mural comes up in Panaji, the muse, a 99-year-old Goan freedom fighter, looks on from her balcony". The Indian Express. Archived from the original on 24 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-12-26.
- ↑ Baruah, Rishika (2015-12-18). "The Underground Voice That Fought for Goa, Meet Unsung Libia Lobo". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-05.
- ↑ 9.0 9.1 9.2 9.3 Singh Chadha, Pavneet (2024-05-18). "As a mural comes up in Panaji, the muse, a 99-year-old Goan freedom fighter, looks on from her balcony". The Indian Express. Archived from the original on 24 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-12-26.
- ↑ "30 unsung heroes awarded Padma Shri" (in en-IN). The Hindu. 2025-01-25. https://www.thehindu.com/news/national/unsung-padma-shri-award-recipients/article69140565.ece.