இரண்டாம் கர்நாடகப் போர்
இரண்டாம் கர்நாடகப் போர் (Second Carnatic War (1749–1754), ஐதராபாத் மற்றும் ஆற்காட்டை கைப்பற்ற 1749–1754-ஆண்டுகளில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிப் படைத்தலைவர் இராபர்ட் கிளைவ்வின் ஆங்கிலேயப் படைகளுக்கும், ஐதராபாத் நிசாம் முசாபர் ஜங்க், ஆற்காடு நவாப் சந்தா சாகிப் மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போராகும். இப்போரில் ஆங்கிலேயர்களுக்கு உதவியாக, சந்தா சாகிப்பின் மருமகன் முகமது அலி கான் வாலாஜா மற்றும் ஐதராபாத் நிசாமின் உறவினர் நசீர் ஜங்க் ஆகியோர் இருந்தனர்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/6/65/WAR_ELEPHANTS_CHARGE_THE_GATES_OF_THE_FORT_AT_ARCOT..gif/170px-WAR_ELEPHANTS_CHARGE_THE_GATES_OF_THE_FORT_AT_ARCOT..gif)
1751-இல் இராபர்ட் கிளைவ் ஆற்காட்டையைக் கைப்பற்றினார். டூப்ளே தலைமையிலான பிரஞ்சுப் படைகள் தோற்றது. 1754-இல் செய்து கொண்ட பாண்டிச்சேரி ஒப்பந்தப்படி, இரண்டாம் கர்நாடகப் போர் நிறைவுற்றது. பாண்டிச்சேரி ஒப்பந்தப்படி, முகமது அலி கான் வாலாஜா, ஆற்காடு நவாப் ஆனார். சந்தா சாகிபு பதவியிறக்கப்பட்டார். ஐதராபாத் நிசாம் முசாபர் ஜங்கை பதவியிலிருந்து நீக்கி நசீர் ஜங்க் பதவி ஏற்றார்.[1]