இனமொழி
இனமொழி என்பது ஓர் இலக்கணக் குறியீடு. தொல்காப்பியம், பரிமாணம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
விளக்கம்
தொகு- மேலைச்சேரிக் கோழி அலைத்தது எனின் கீழூச்சேரிக் கோழி அலைப்புண்டது என்பது பெறப்பட்டது
- குடம் கொண்டான் வீழ்ந்தான் என்றவழிக் குடமும் வீழ்ந்தது என்பதாயிற்று. இது இனம் செப்பிய மொழி. [4]
- சோறு உண்டான் என்றால் சோற்றோடு சேர்த்துக் குழம்பு முதலானவற்றையும் உண்டான் என அதன் இனத்தையும் குறிப்பிடுகிறது.
- நஞ்சுண்டான் சாம் என்னும்போது நஞ்சுண்டாள் சாம் என அதன் இனத்தையும் குறித்தது.
- வெற்றிலை போட்டுக்கொண்டான் என்றால் பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றையும் போட்டுக்கொண்டான் என்பதை உணர்த்துவது இனமொழி [5]
- பார்ப்பான் கள் உண்ணான் என்றவழி பார்ப்பினி கள்ளுண்ணாள் என அதன் இனத்தையும் குறித்தது. [6]