இந்தோனேசியாவில் போர்த்துகீசியர்கள்

இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் போர்த்துகீசிய குடியேற்றம்

இந்தோனேசியாவில் போர்த்துகீசியர்கள் (ஆங்கிலம்: The Portuguese in Indonesia; இந்தோனேசியம்: Imperium Portugal di Nusantara) என்பது இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் போர்த்துகீசிய குடியேற்றவாதத்தின் 16-ஆம் நூற்றாண்டு கால வரலாற்றைக் குறிப்பிடுவதாகும். இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் முதன்முதலாகக் கால்டி வைத்த ஐரோப்பியர்கள் எனும் பெருமைப் பெயரும் போர்த்துகீசியர்களையே சாரும்.

இந்தோனேசியாவில் போர்த்துகீசியர்கள்
The Portuguese in Indonesia
Imperium Portugal di Nusantara
இன்சுலிந்தியா
1522–1605
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
கிழக்கிந்திய தீவுகளில் போர்த்துகீசிய பேரரசின் வரைபடம்
கிழக்கிந்திய தீவுகளில் போர்த்துகீசிய
பேரரசின் வரைபடம்
நிலைபோர்த்துகீசிய பேரரசின் குடியேற்றம்; உடைமைகள்
தலைநகரம்
  • காசுதெலா கோட்டை
    (1523–1575)
  • அம்போயினா கோட்டை
    (1575–1605)
பேசப்படும் மொழிகள்போர்த்துக்கேயம், மலாய், பிற பழங்குடி மொழிகள்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• 1522–1557
ஜோன் III
• 1598–1605
பிலிப் III
மலுக்கு ஆளுநர் 
• 1522–1525
அந்தோனியோ டி பிரித்தோ
வரலாற்று சகாப்தம்தொடக்க நவீன காலம்
• நிறுவப்பட்டது
1522
22 ஏப்ரல் 1529
• அம்போயினா போர்
22 பிப்ரவரி 1605
பின்னையது
}
இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்
போர்த்துகீசிய குடியேற்றவிய காலம்
Portuguese colonization era
1512–1605
1519-ஆம் ஆண்டில் மலுக்கு தீவுகள்
அமைவிடம்மலாய் தீவுக்கூட்டம், கிழக்கிந்தியத் தீவுகள்
உள்ளிட்டவைபோர்த்துகீசிய-தெர்னாத்தே போர்கள்
தலைவர்(கள்)அபோன்சோ டி அல்புகெர்க்கே
அப்ரூ அந்தோணி
பிரான்சிஸ்கோ செராவ்
முக்கிய நிகழ்வுகள்கண்டுபிடிப்புக் காலம்
காலவரிசை
இசுலாமிய காலம் இடச்சு
போர்த்துகீசிய தீமோர்

16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நறுமணப் பொருட்கள் சார்ந்த (மசாலா) வணிகம் இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் மிகுந்த இலாபம் தரும் வணிகமாக இருந்தது. அதில் ஆதிக்கம் செலுத்துவதே போர்த்துகீசியர்களின் முதன்மை இலக்காக இருந்தது.

பொது

தொகு

போர்த்துகீசியர்கள் தொலை கிழக்கு நாடுகளுக்கு, கடல் பயணங்கள் மேற்கொள்வதற்கு நறுமணப் பொருட்களத் தவிர சமயப் பரப்புரை செய்வதும் ஒரு காரணமாக இருந்தது. இவற்றின் விளைவாக வணிக நிலையங்கள் மற்றும் கோட்டைகள் போன்றவற்றைப் போர்த்துகீசியர்கள் நிறுவினார்கள்.

இவ்வாறான தாக்கங்களினால், நவீன இந்தோனேசியாவின் சில இடங்களில், போர்த்துகீசியப் பண்பாட்டுக் கூறுகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்றாக மலாக்கா போர்த்துகீசிய கிராமம் எடுத்துக்காட்டாக அமைகின்றது.

அமைவு

தொகு

16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பிய நாடுகள் தொழில்நுட்பத் துறையில் பற்பல முன்னேற்றங்களைக் கண்டு வந்தன. கடல்வழிப் பயணங்கள், கப்பல் கட்டுதல் மற்றும் எதிர்வினை ஆயுதங்கள் தயாரித்தல் போன்றவற்றில் போர்த்துகீசியர்களின் நிபுணத்துவம் மேலோங்கி உச்சம் கண்டது; ஐரோப்பியர்கள், துணிச்சலான கடல் பயணங்களை மேற்கொள்வதற்கு தடைகள் இல்லா தடங்களையும் அமைத்துக் கொடுத்தது.

கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்த முதல் ஐரோப்பியர்கள் என்றால் அவர்கள் போர்த்துகீசியர்களே ஆகும். அதற்கு முன்னர், 1512-இல் போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றி விட்டனர். அதன் பின்னர், தொலை கிழக்கு நாடுகளின் நறுமணப் பொருட்கள் சார்ந்த வணிகத்தில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர்;[1] தொடர்ந்து, அவர்கள் சார்ந்த கிறித்துவ சமயப் பரப்புரைகளையும் விரிவுபடுத்தத் தொடங்கினர்.

இசுலாமிய இராச்சியங்கள்

தொகு

1522-இல், மேற்கு ஜாவா சுந்தா இராச்சியத்துடன் ஒரு கூட்டணியை அமைக்க போர்த்துகீசியர்கள் முயற்சி செய்தனர்; மற்றும் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளவும் முயற்சி செய்தனர். இருப்பினும் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. பின்னர், ஜாவாவில், போர்த்துகீசியர்களுக்கும் இசுலாமிய இராச்சியங்களுக்கும் இடையில் பகைமை ஏற்பட்டன.[2]

உள்ளூர் ஆட்சியாளர்களுடன் கூட்டணி

தொகு
 
பண்டா தீவுகளில் பூர்வீகத்தைக் கொண்ட ஜாதிக்காய் செடிகள்
 
போர்த்துகீசிய கிழக்கிந்திய கப்பல்கள் (1589)
 
போர்த்துகீசிய திமோர் அஞ்சல் தலை (1898)
 
போர்த்துகீசிய திமோர் தலைநகர் டிலி (1960)
 
போர்த்துகீசிய தீமோர் தலைநகரில் போர்த்துகீசிய அலுவலகம் (1946)
 
போர்த்துகீசிய தீமோர் டிலி துறைமுகம் (1945)

அதன் பின்னர், போர்த்துகீசியர்களின் பார்வை கிழக்கே மலுக்கு தீவுகள் பக்கமாய்த் திரும்பியது. மலுக்கு தீவுகள் என்பது அப்போதைக்கு பல்வேறு சமஸ்தானங்கள் மற்றும் இராச்சியங்களின் கூட்டமைப் கொண்டிருந்தது. இந்த இராச்சியங்கள் சில கட்டங்களில் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டன. இதைப் போர்த்துகீசியர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இராணுவ அதிகாரப் பயன்பாடு; உள்ளூர் ஆட்சியாளர்களுடனான கூட்டணி; இவற்றின் மூலமாக, வடக்கு சுலவேசி, மலுக்கு தீவுகள், தெர்னாத்தே, அம்போன், சோலோர் உள்ளிட்ட பல பகுதிகளில், வணிக நிலைகள், கோட்டைகள் மற்றும் வணிகப் பயணங்கள் போன்றவற்றைப் போர்த்துகீசியர்கள் நிறுவிக் கொண்டனர்.

கிழக்கு ஆசியா

தொகு

இருப்பினும், 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், போர்த்துகீசிய சமயப் பரப்பு நடவடிக்கைகள் உச்சம் கண்டன. தொலை கிழக்கு நாடுகளில் போர்த்துகீசிய இராணுவ ஆக்கிரமிப்பின் நிலப்பாடு குறைந்த பிறகு, போர்த்துகீசியர்களின் பார்வை கிழக்கு ஆசியப் பகுதிகளுக்குத் திரும்பியது.

போர்த்துகீசிய இந்தியா (Portuguese India), போர்த்துகீசிய இலங்கை (Portuguese Ceylon), ஜப்பான், மக்காவு (Portuguese Macau) மற்றும் சீனா போன்ற நிலப்பகுதிகளுக்கு போர்த்துகீசியர்களின் இலக்கு மாறியது; மேலும் பிரேசிலில் சர்க்கரை மற்றும் அட்லாண்டிக் அடிமை வணிகம் (Atlantic Slave Trade) போன்றவை அவர்களின் பார்வையை மேலும் திசை திருப்பின. அத்துடன் கிழக்கிந்தியத் தீவுகளில் அவர்களின் முயற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தம் கண்டன.

போர்த்துகீசிய சமய பரப்பு

தொகு

வடக்கு சுலாவெசிக்கு வந்த முதல் ஐரோப்பிய மக்கள் போர்த்துகீசியர்கள் ஆவார்கள். பிரான்சிஸ் சேவியர் (Francisco Xavier) கிறிஸ்தவ நடவடிக்கைகளை ஆதரித்தார் மற்றும் அல்மகெரா (Halmahera) தோலோவில் உள்ள போர்த்துகீசிய சமயப்பரப்பு நிலையத்தைப் பார்த்தார். அது மலுக்கு தீவுகளில் முதல் கத்தோலிக்க நிலையம் ஆகும்.

1534-ஆம் ஆண்டு மொரோதாய் (Morotai) எனும் இடத்திலிருந்து தலைவர்கள் சிலர் ஞானஸ்நானம் கேட்டு தெர்னாத்தேவுக்கு வந்தபோது இந்த நிலையம் தொடங்கப்பட்டது. தெர்னாத்தேவின்ன் பாதிரியாரான சிமோ வாஸ் (Simão Vaz), நிலையத்தை உருவாக்க தோலோ கிராமத்திற்குச் சென்றார். இந்த நிலையத்தின் கட்டுமானம், எசுபானியர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் தெர்னாத்தே மக்களுக்கு இடையிலான மோதலுக்குக் காரணமாக இருந்தது. பின்னர் சாவோ (Sao) எனும் இடத்தில் சிமோ வாஸ் கொலை செய்யப்பட்டார்.[3][4]

பண்பாட்டு எச்சங்கள்

தொகு

1602-ஆம் ஆண்டு வரையில் போர்த்துகீசியர்களின் கிழக்கிந்திய ஆளுமை நீடித்தது. கிழக்கிந்தியத் தீவுகளில் இடச்சுக்காரர்களின் வணிக அதிகார ஆதிக்கத் தலையீடுகளினால் போர்த்துகீசியர்களின் அதிகாரமும் ஆளுமைச் செல்வாக்கும் சன்னம் சன்னமாய்க் குறைந்தன. இறுதியில் போர்த்துகீசிய தீமோரில் (Portuguese Timor) மட்டுமே சிறிது காலம் நீடித்தது.

கிழக்கிந்தியத் தீவுகளில் ஒரு சில போர்த்துகீசிய பண்பாட்டுக் கூறுகள் மட்டுமே இன்றுவரை நிலைத்து நீடிக்கின்றன. ஒரு காலக் கட்டத்தில் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் அதிகார வர்க்கத்தினராய்த் திகழ்ந்த போர்த்துகீசியர்கள் இறுதியில் போர்த்துகீசிய தீமோரில் அடங்கிப் போயினர்.[5]

நவீன இந்தோனேசிய கலாசாரத்தில் போர்த்துகீசியர்களின் தாக்கங்கள் மிகக் குறைவு. காதல் கெரோன்காங் (Keroncong) கித்தார் இசைக்கருவிகள், சில இந்தோனேசியச் சொற்கள்; மற்றும் கிழக்கு இந்தோனேசியாவில் டா கோஸ்தா (da Costa), டயஸ் (Dias), டி பிரீட்ஸ் (de Fretes) மற்றும் கோன்சால்வஸ் (Gonsalves) போன்ற சில குடும்பப் பெயர்கள் இன்னும் நீடிக்கின்றன.

போர்த்துகீசிய தாக்கங்கள்

தொகு

போர்த்துகீசியர்கள் தென்கிழக்காசியாவில் சில முக்கியமான தாக்கங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றுள் மிக முக்கியமானது; அவர்கள் ஏற்படுத்திய வணிக வலையமைப்பின் சீர்குலைவு; ஒழுங்கின்மை (Disruption and Disorganisation of the Trade Network) ஆகும். போர்த்துக்கீசிய மலாக்காவைக் கைப்பற்றியதன் விளைவாகவும், கிறிஸ்தாங் மக்களுடன் (Kristang people) இந்தோனேசியாவில் கிறிஸ்தவத்தைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு பரப்பியதன் விளைவாகவும் சில தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்தோனேசியாவின் அம்போன் தீவுகளிலும்; மலாக்காவிலும் போர்த்துகீசிய சிறுபான்மையினர் இன்றும் வாழ்ந்து வருகின்றன. ஏறக்குறைய 500 ஆண்டுகாலமாய் உள்நாட்டு அரசியல் நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வருகின்றனர்.[6]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ricklefs, M.C (1969). A History of Modern Indonesia Since c. 1300, second edition. London: MacMillan. pp. 22–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-57689-6.
  2. Sumber-sumber asli sejarah Jakarta, Jilid I: Dokumen-dokumen sejarah Jakarta sampai dengan akhir abad ke-16. Cipta Loka Caraka. 1999.; Zahorka, Herwig (2007). The Sunda Kingdoms of West Java, From Tarumanagara to Pakuan Pajajaran with Royal Center of Bogor, Over 1000 Years of Prosperity and Glory. Yayasan Cipta Loka Caraka.
  3. Vaz, Simon. Halmahera dan Raja Ampat sebagai kesatuan majemuk: studi-studi terhadap. p. 279.
  4. Francis Xavier; His Life, His Times: Indonesia and India, 1545-1549. Xaviers mission. p. 179.
  5. Miller, George, ed. (1996). To The Spice Islands and Beyond: Travels in Eastern Indonesia. New York: Oxford University Press. pp. xv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-65-3099-9.
  6. Ricklefs (1991), pp. 22 to 26

மேலும் படிக்க

தொகு
  • de Silva, Chandra Richard (Winter 1974). "The Portuguese East India Company 1628-1633". Luso-Brazilian Review (University of Wisconsin Press) 11 (2): 152–205. 
  • Disney, A.R. (1977) "The First Portuguese India Company, 1628-33", Economic History Review, Vol. 30 (2), p. 242-58.

வெளி இணைப்புகள்

தொகு