இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை

இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை (India–Myanmar–Thailand Trilateral Highway (சுருக்கமாக:IMT Highway),[1] இவ்வழித்தடம் இந்தியாவின் கீழ்த்திசை கவனக் குவிப்புக் கொள்கையின்படி நிறுவப்பட்டது. இது இம்பால்-மோரே வரையான தேசிய நெடுஞ்சாலை எண் 102 உடன் இணைக்கப்படுகிறது.

இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மோரே, மணிப்பூர், இந்தியா
முடிவு:மே சோட், தக் மாகாணம், தாய்லாந்து

4 வழித்தடங்கள் கொண்ட இந்நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 1360 கிலோ மீட்டர் (850 மைல்கள் ஆகும். சூலை 2023ல் இந்நெடுஞ்சாலையின் 70% பணி முடிந்துள்ளது.[2]மியான்மிரில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரண்மாக 30% சாலைப் பணிகள் முடியவில்லை[3].இந்நெடுஞ்சாலையின் பணி முடிவடைந்தவுடன் ஆசியான்-இந்தியா இடையே சுதந்திர வர்த்தக பகுதியாக மாறும்.[4]

வழித்தடங்கள்

தொகு

இந்நெடுஞ்சாலை வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் மோரேயில் தொடங்கி மியான்மரின் மண்டலை மற்றும் தலைநகரம் நைப்பியிதோ மற்றும் மியாவதி நகரங்கள் வழியாக தாய்லாந்து நாட்டின் தக் மாகாணத்தின் மேற்கில் உள்ள மே சோட் நகரத்துடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "All you want to know about Delhi to Bangkok Road Trip - Myths & Reality". Tripoto. 11 September 2015. பார்க்கப்பட்ட நாள் 20 September 2015.
  2. Nearly 70% work of India-Myanmar-Thailand Trilateral Highway complete, says Gadkari
  3. India-Myanmar-Thailand highway
  4. ASEAN–India Free Trade Area