இதயத்தில் உள்ள இடது ஆரிக்கிளும் இடது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து இடது இதயம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இடது ஆரிக்கிள், இடது வெண்ட்டிரிக்கிள், மகாதமனி ஆகிய மூன்றும் சேர்த்து இடது இதயம் என்று குறிக்கப்படுவதும் உண்டு.

இதயத்தின் வெட்டுத்தோற்றம், வெள்ளை அம்புக்குறிகள் இயல்பான இரத்த ஓட்டத்தைக் குறிக்கின்றன.

இடது ஆரிக்கிள் நுரையீரலில் இருந்து வரும் ஒட்சிசன் ஏற்றப்பட்ட இரத்தத்தை பல்மோனரி சிரைகளின் வழியாகப்பெறுகிறது. பின் குருதி மிட்ரல் வால்வு வழியாய் இடது வெண்ட்டிரிக்களுக்கு அனுப்பப்படுகிறது. இடது வெண்ட்டிரிக்கிள் மகாதமனி வால்வு வழியாக இரத்தத்தை மகாதமனிக்குள் செலுத்துகிறது.

இடது இதயத்தில் இடது இதயவறை, இடது வெண்டிரிக்கிள் ஆகிய இரண்டு தனியறைகள் உள்ளன. இவை மிட்ரல் தடுக்கிதழால் பிரிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Betts, J. Gordon (2013). Anatomy & physiology. OpenStax College, Rice University. pp. 787–846. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-938168-13-0. Archived from the original on 27 February 2021. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=இடது_இதயம்&oldid=4195498" இலிருந்து மீள்விக்கப்பட்டது